
பிப்ரவரி 24ஆம் தேதி வெளியான அஜித்தின் வலிமை திரைப்படம் , 3வது வாரத்திலும் மவுஸு குறையாமல், பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையை கிளப்பி வருகிறது.
நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவரின், படம் திரையரங்குகளில் வெளிவந்தால், இன்றளவும் திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவர் படங்களில் நடிப்பதை தாண்டி துப்பாக்கி சுடுதல், பைக் ரேஸ் செல்வது என பல விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.
வலிமை திரைப்படம்:
அஜித் நடிப்பில், நேர்கொண்ட பார்வை படத்தின் இயக்குனர், எச்.வினோத் இயக்கத்தில், வலிமை திரைப்படம் கடந்த 24ம் தேதி உலகம் முழுவதும் மாஸாக வெளியாகி இருந்தது.
போனிகபூர் தயாரிப்பில் உருவான இந்த படத்தில், நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். இப்படத்தில், வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்துள்ளார்.
பாடல்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா உயிர்கொடுக்க, பின்னணி இசையை ஜிப்ரான் அமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இரண்டு வருட காத்திருப்பிற்கு பிறகு வலிமை திரைப்படம்:
அஜித்தின் ரசிகர்கள், இரண்டு வருட காத்திருப்பிற்கு பிறகு வலிமை திரைப்படம் வெளியானதால், இந்த படத்தை திரையில் காண ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த காத்திருந்தனர். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், அஜித் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் படமாக இருந்தது. ரசிகர்களின் பேராதரவை தொடர்ந்து வலிமை திரைப்படம் தமிழ்நாடு வசூலில் புதிய சாதனை படைத்திருந்தது. நாளுக்கு நாள் இதன் வசூல் விவரங்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டு இருக்கின்றனர்.
படத்தின் வசூல் விவரம்:
முதல் நாளில் இருந்தே படம் வசூல் வேட்டை நடத்தி வந்த நிலையில், தற்போது 3வது வாரத்தில் கூட படத்தின் புக்கிங்கிற்கு எந்த குறைச்சலும் இல்லாமல் தியேட்டர்களில் கூட்டம் இருக்கிறதாம்.
வெளியான முதல் மூன்று நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூல் செய்து சாதனை பெற்றது. இதுவரை படம் உலகம் முழுவதும் ரூ. 190 கோடிக்கு வசூலித்துள்ளதாம், விரைவில் ரூ. 200 கோடியை எட்டிவிடும் என்கின்றனர். இதனால், அஜித் ரசிகர்கள் படு குஷியில் உள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.