Bharath 50th movie : நடிகர் பரத்தின் 50-வது படம்... ஹீரோயினாக பிரபல நடிகை ஒப்பந்தம்

By Asianet Tamil cinema  |  First Published Mar 17, 2022, 10:27 AM IST

Bharath 50th movie : நடிகர் பரத் நடிக்கும் 50-வது படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆர்.பி.பாலா இயக்க உள்ளார்.


காதல் ஹீரோ பரத்

ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான பாய்ஸ் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் பரத். இதையடுத்து செல்லமே படத்தில் ரீமா சென்னின் தம்பியாக நடித்திருந்த அவர், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ரிலீசான காதல் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

Tap to resize

Latest Videos

இதையடுத்து எம் மகன், வெயில், நேபாளி, பழனி, சேவல் என அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த பரத். இதுவரை 49 படங்களில் நடித்துள்ளார்.

50-வது படம் ஆரம்பம்

இந்நிலையில், அவர் நடிக்கும் 50-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆர்.பி.பாலா இயக்க உள்ளார். இவர் மலையாளத்தில் புலி முருகன், லூசிபர், குரூப், சல்யூட் போன்ற படங்களுக்கு டயலாக் ரைட்டராக பணியாற்றி உள்ளார். தமிழில் அவர் இயக்கும் முதல் படம் இதுவாகும்.

வாணி போஜன் ஜோடி

இப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடிக்க உள்ளார். விவேக் பிரசன்னா, டேனியல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு நேற்று பூஜை போடப்பட்டது. வருகிற 21-ந் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

இதையும் படியுங்கள்... https://tamil.asianetnews.com/gallery/cinema/beast-movie-jolly-o-gymkhana-song-copy-troll-r8vfpm

click me!