BB Ultimate : திடீரென கட்டிப்பிடித்ததால் ஆத்திரம்... பாலாவை கடித்து வைத்த ரம்யா பாண்டியன் - வைரலாகும் வீடியோ

Ganesh A   | Asianet News
Published : Mar 16, 2022, 08:01 PM IST
BB Ultimate : திடீரென கட்டிப்பிடித்ததால் ஆத்திரம்... பாலாவை கடித்து வைத்த ரம்யா பாண்டியன் - வைரலாகும் வீடியோ

சுருக்கம்

BB Ultimate : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் டாஸ்கின் போது தன்னை கட்டிப்பிடித்த பாலாவின் நடிகை ரம்யா பாண்டியன் கடித்து வைத்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

புதுபுது டாஸ்க்

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 40 நாட்களைக்கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியின் விதிப்படி, ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களுக்கு குறிப்பிட்ட டாஸ்க் கொடுக்கப்படும், அதில் வெற்றி பெறுபவர்களுக்கு சில சலுகைகளும் வழங்கப்படும். அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட்டில் முட்டை டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது.

முட்டை டாஸ்க்

இதில் புளூ, ரெட், கிரீன் என மூன்று அணிகளாக பிரிந்து போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இதில் ஒவ்வொரு அணியிலும் 3 பேர் உள்ளனர். பிக்பாஸ் குழுவால் அவ்வப்போது கொடுக்கப்படும் முட்டைகளை பாதுகாப்பதே இந்த டாஸ்கின் முக்கிய அம்சம். இதில் பிற அணியினர் திருடி விடாமலும் தடுப்பது முக்கியம் ஆகும்.

பாலா - ரம்யா மோதல்

அந்த வகையில், இந்த டாஸ்கில் ரம்யா பாண்டியன், பாலா டீமுக்கு சொந்தமான இரண்டு முட்டைகளை திருடி எடுத்து வரும்போது, பாலா அவரை தடுக்கிறார். அப்போது ரம்யாவை பின்னாடி இருந்து கட்டிப்பிடித்து முட்டையை எடுக்க முயற்சிக்கிறார் பாலா. அப்போ அவரிடம் இருந்து தப்பிக்க அவரது கையை ரம்யா பாண்டியன் கடித்து வைத்துள்ளார்.

கடிச்சு வச்ச ரம்யா பாண்டியன்

இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனை புரோமோவாக பிக்பாஸ் குழு வெளியிட்டுள்ளது. நான் முட்டையை பிடிச்சுகிட்டு இருக்கும் போது பாலா physical-ஆ என்னை அட்டாக் பண்ணியதால் கடிச்சேன் என ரம்யா பாண்டியன் சொல்ல, இதைக் கேட்டு கோபமடைந்த பாலா, கடிச்சத நியாயப்படுத்தாதீங்க ரம்யா என சொல்கிறார். 

தான் அதை தப்பான விதத்தில் சொல்லவில்லை என்றும், அதை திரும்ப திரும்ப சொல்லி தப்பா ஆக்கிடாதீங்க என பாலாவிடம் ரம்யா பாண்டியன் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் புரோமோவில் இடம்பெற்று உள்ளன. இதில் யார் பக்கம் தப்பு உள்ளது என்பதை குறும்படம் போட்டு தான் பார்க்க வேண்டும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Beast:அரபிக்குத்தை அடிச்சுதூக்க வருது பீஸ்ட் 2-வது பாடல்! விஜய் குரலில்“ஜாலியோ ஜிம்கானா”- ரிலீஸ்தேதி அறிவிப்பு

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?