முதன்முறையாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வைகைப்புயல் வடிவேலு பாடிய மாமன்னன் பாடல் - ரிலீஸ் தேதி அறிவிப்பு

By Ganesh A  |  First Published May 17, 2023, 12:01 PM IST

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமன்னன் படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வைகைப்புயல் வடிவேலு பாடிய பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.


தமிழில் பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ். அவர் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தான் மாமன்னன். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் வில்லனாக மலையாள நடிகர் பஹத் பாசிலும், முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலுவும் நடித்துள்ளார்.

மாமன்னன் திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் கெரியரில் கடைசி படமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இப்படத்தை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஜூன் மாதம் பக்ரீத் விடுமுறையில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சி உள்ளதால், அதன் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... பிரபல வாரிசு நடிகருடன் நடிகை லாவண்யா திரிபாதி காதல்... சைலண்டாக நடக்கும் திருமண வேலைகள்?

அந்த வகையில் மாமன்னன் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில் வடிவேலு ஒரு பாடலை பாடி உள்ளதாகவும், அதற்கான ரெக்கார்டிங்கின் போது எடுத்த புகைப்படத்தை ஏ.ஆர்.ரகுமான் அண்மையில் பதிவிட்டு இருந்தார். அதைப்பார்த்த ரசிகர்கள் அந்தப் பாடல் எப்போது ரிலீஸ் ஆகும் என தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். அவர்களுக்காக தற்போது அதிரடியான அப்டேட்டை மாமன்னன் படக்குழு வெளியிட்டு உள்ளது.

First single releasing on 19th May 🚀 pic.twitter.com/wdIXmX6BSH

— A.R.Rahman (@arrahman)

அதன்படி மாமன்னன் படத்தின் முதல் பாடலாக வடிவேலு பாடிய பாடலை தான் வெளியிட உள்ளார்களாம். இப்பாடல் வருகிற மே 19-ந் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வடிவேலு பாடிய முதல் பாடல் இது என்பதால் இதனை கேட்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஜூன் 1-ந் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... கேன்ஸ் பட விழாவில் கிளாமர் குயினாக வந்த தனுஷ் பட நடிகை சாரா அலிகான்

click me!