கேன்ஸ் திரைப்பட விழா ரெட்கார்பெட்டில் பட்டு வேஷ்டியில் மாஸ் காட்டிய அமைச்சர் எல்.முருகன்! குஷ்பூவும் பங்கேற்பு

By manimegalai a  |  First Published May 17, 2023, 12:09 AM IST

அமைச்சர் எல்.முருகன் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பாரம்பரிய உடை அணிந்து ரெட் கார்பெட்டில் நடைபோட்டர். மேலும் நடிகை நடிகை குஷ்புவும், இன்று துவங்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க உள்ளதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
 


இந்த ஆண்டு பிரான்சில், இன்று முதல் துவங்க உள்ள கேன்ஸ் திரைப்பட விழா, மே 27 ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த திரைப்பட விழாவில் பங்கேற்க மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் தலைமையில், இந்தியக் குழு நேற்று பிரான்ஸ் புறப்பட்டு சென்றனர்.

பல்வேறு நாட்டை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொள்ளும் இந்த கேன்ஸ் திரைப்பட விழாவின் தொடக்க நாளான இன்று சிவப்புக் கம்பளத்தில், தமிழ்ப் பாரம்பரிய உடையான பட்டு ‘வேஷ்டி’ அணிந்து, தேசிய கோடி பதித்த உடையில்... அங்கவஸ்திரத்துடன் தென்னிந்திய மற்றும் தமிழகத்தின் கலாசாரத்தை எல். முருகன் வெளிப்படுத்தியுள்ளார்.

Tap to resize

Latest Videos

நிச்சயதார்த்தத்திற்கு பின் சர்வானந்த் திருமணம் நின்று விட்டதா? தீயாய் பரவிய தகவல்... உண்மையை உடைத்த நண்பன்!

மேலும் இவருடன், கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சென்றுள்ள ‘தி எலிஃபண்ட் விஸ்பரா்ஸ்’ ஆவணப்பட புகழ் திரைப்படத் தயாரிப்பாளா் குனீத் மோங்கா, இந்திய நடிகை மனுஷி சில்லா், இந்திய திரைப்பட நடிகை ஈஷா குப்தா, மணிப்புரி நடிகா் கங்காபம் டோம்பா ஆகியோர் மட்டுமே செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் சற்று முன்னர், கேன்ஸ் திரைப்பட விழாவில்  அமைச்சருடன் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூவும் கலந்து கொண்டுள்ள தகவலை அவரே தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

ஜாக்கெட் போடாத சேலை போல இருக்கு? தினுசான மாடர்ன் உடையில் சொக்க வைக்கும் ஐஸ்வர்யா மேனன்!

 

Thank you for this opportunity. 🙏 pic.twitter.com/C6WshtxKel

— KhushbuSundar (@khushsundar)

 

click me!