தமிழ் திரையுலகில் நல்ல நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட தீபா காதலுக்காக தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
தென்னிந்திய திரையுலகில் தொடர் தற்கொலை சினிமா ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அந்த வகையில் தற்போது சென்னையில் வசித்து வரும் தமிழ் சினிமா நடிகை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 27ஆம் தேதி திரைக்கு வந்த வாய்தா படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் பவுலின ஜெசிகா. இந்த படத்தை மகிவர்மன் இயக்கியிருந்தார். ராமசாமி, நாசர், புகழ் மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சாதியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடித்த பவுலின் ஜெசிலா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் மல்லிகை அவன்யூ பகுதிகள் வசித்து வந்தவர் பவுலின் என்கிற தீபா. இவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வந்துள்ளார். முன்னதாக பல சினிமாக்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த இவருக்கு வாய்தா படத்தில் நாயகியாகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவர் நடித்த முதல் படம் வெளியான நிலையில், நேற்று இவர் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பு பிணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கே!..கேமராவை பார்த்ததும் உடையை இறக்கி விட்ட சர்ச்சை நடிகை
நேற்று அவரது உறவினர்கள் பலமுறை தொலைபேசிகள் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர் ஆனால் தீபா அவர்களின் அழைப்பை எடுக்கவில்லை. இதை அடுத்து அவரது நண்பரான பிரபாகரன் வீட்டிற்கு நேரில் சென்று பார்த்த போது தீபா மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. பின்னர் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த தீபாவின் சகோதரர் தினேஷ் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு, சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீபாவின் உடலை மீட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு... சிவாஜி கணேசனின் முதல் படம்... வைரலாகிறது பார்த்திராத படப்பிடிப்புத்தள புகைப்படம்
மேலும் முதற்கட்ட விசாரணையில் நடிகை கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. அந்த கடிதத்தில் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன் ஆனால் காதல் கைகூடவில்லை. அதனால் இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்வதாகவும் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தமிழ் திரையுலகில் நல்ல நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட தீபா காதலுக்காக தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.