ராதிகாவிற்காக இனியாவை விட்டு கொடுக்கும் கோபி? பாக்கியலட்சுமியில் இனிவரப்போவது !

By Kanmani P  |  First Published Sep 18, 2022, 11:13 AM IST

தாயிடம் அவ்வாறு நினைக்க வேண்டாம் என கூறினாலும் இனிய வந்தால் இருவரையும் பிரித்து விடுவாளோ என்கிற சந்தேகம் ராதிகாவிற்கு வருகிறது.


விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் தற்போது பல திருப்பங்கள்  நிகழ்ந்து வருகிறது. அதன்படி கோபி இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வர அதே நேரத்தில் தனது கணவரின் திருமணத்திற்கு தான் சமையல் ஆர்டர் எடுத்துள்ளோம் என்பது தெரியாமல் ஆர்டர் கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறார் பாக்கியலட்சுமி. முன்னதாக தனது திருமணம் குறித்து அம்மா ஈஸ்வரியிடம் கோபி தெரிவிக்க செம கடுப்பான அவரது அம்மா. கோபியை தாறுமாறாக திட்டியதோடு எப்படி கல்யாணம் பண்ணிக்கிறேன்னு பார்க்கிறேன் என கடுமையா விமர்சித்து விட்டார். இருந்தும் திருந்தாத கோபி திருமண விஷயத்தை ஒருவழியாக அம்மாவிடம் தெரிவித்தது குறித்து மகிழ்ச்சியில் இருக்கிறார்.

இதற்கிடையே தன மகள் மீது அளவு கடந்த அன்பு கொண்ட கோபி, இரண்டாவது  திருமணத்திற்கு பிறகு ராதிகா இனியா என அனைவரையும் ஒரே வீட்டில் வைத்திருக்க ஆசைப்படுகிறார். இது குறித்து அவ்வப்போது ராதிகாவிடமும் பேசி வருகிறார். தொடர்ந்து மகள் இனியா குறித்து மிகுந்த கவலை உடன் கோபி பேசுவதால் ராதிகாவின் அம்மாவிற்கு கோபம் ஏற்படுகிறது. அதனால் ராதிகாவிடம் இனியா குறித்து கோபியை இனிமேல் பேசக்கூடாது என்று கூறிவிடு, இனிய வந்தால் உன் மகளையும் உன்னையும்  ரோட்டில் நிறுத்தி விடுவாள். அவள் பாசத்தை காட்டிய தாயையும் தந்தையும் சேர்த்து வைத்து விடுவா.ள் அதனால் இனியாவிடம் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளக் கூடாது என கோபியிடம் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிடு என தெரிவிக்கிறார்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு... வயதை மிஞ்சிய நடிப்பு...இந்தியன் 2 படப்பிடிப்பில் நான்ஸ்டாப் ரிஸ்க் எடுத்த கமலஹாசன்

தனது தாயிடம் அவ்வாறு நினைக்க வேண்டாம் என கூறினாலும் இனிய வந்தால் இருவரையும் பிரித்து விடுவாளோ என்கிற சந்தேகம் ராதிகாவிற்கு வருகிறது. இதனால் இனிவரும் தொடர்களில் ராதிகா கோபியிடம் மகள் இனியாவை பிரிந்தால் தான் மணவாழ்வில் இணைய முடியும் என தெரிவிப்பார். இதைத்தொடர்ந்து ராதிகா மீதுள்ள காதலால் இனியாவை கோபி பிரிவாரா? அல்லது மகளுக்காக பாக்கியவிடமே தஞ்சம் அடைவாரா? என வரும் தொடர்களில் பார்க்கலாம்.

மேலும் செய்திகளுக்கு... வெளியீட்டு உரிமை ரெட் ஜெயன்ட் சாட்டிலைட் உரிமை சன் டிவி PS 1 வளைத்து பிடித்த திமுக குடும்பம்

click me!