ஒருவழியாக 5 இடத்திற்குள் வந்த விஜய் டிவி பிரபல சீரியல்கள்...மற்ற இடத்தை வாரிசுருட்டிய சன்டிவி தொடர்கள்

Published : Sep 17, 2022, 03:47 PM ISTUpdated : Sep 17, 2022, 09:06 PM IST
ஒருவழியாக 5 இடத்திற்குள் வந்த விஜய் டிவி பிரபல சீரியல்கள்...மற்ற இடத்தை வாரிசுருட்டிய சன்டிவி தொடர்கள்

சுருக்கம்

விரைவில் பிக்பாஸ் 6 ஒளிபரப்பாக உள்ளதால் சன் டிவி உள்ளிட்ட சீரியல்களை அதிகமாக ஒளிபரப்பு செய்யும் சேனல்கள் தங்களது நாடகங்களில் சுவாரஸ்சியத்தை கூட்ட பல அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.

முந்தைய வாரங்களில் விஜய் டிவியை விட சன் டிவி சீரியல்கள் தான் டிஆர்பியில் முதல் ஐந்து இடங்களையும் பிடித்திருந்தது. அதன்படி கயல், சுந்தரி, எதிர்நீச்சல் உள்ளிட்ட சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் கடந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி விஜய் டிவியின் முன்பு பிரபலமாக இருந்த இரண்டு சீரியல்கள் ஒரு வழியாக ஐந்து இடத்திற்குள் வந்துவிட்டது. 

அதாவது பாக்கியலட்சுமி மற்றும் பாரதி கண்ணம்மா தான் அந்த தொடர்கள் டி ஆர் பி ரேட்டிங் பொறுத்தவரை முதல் இடத்தில் சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி சுந்தரி தொடர் பிடித்துள்ளது. இதில் சோசியல் மீடியா பிரபலம் கேப்ரில்லா நாயகியாக நடித்து வருகிறார்.  கலெக்டர் ஆகவேண்டும் என்கிற கனவோடு இருக்கும் பெண்ணை திருமணம் செய்யும் நயனை  அவரை ஏமாற்ற.. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் தன லட்சியத்தை  பிடித்தே தீருவேன் என்னும் வெறியில் பயணிக்கிறார் சுந்தரி. இந்த தொடர் கடந்த வாரத்தில் விறுவிறுப்பாக சென்றதால் முதல் இடத்தை பிடித்து விட்டது.

மேலும் செய்திகளுக்கு.... இவ்ளோ தைரியமா? இரண்டாம் திருமணத்திற்கு அம்மாவை அழைக்கும் கோபி..கடுப்பான ஈஸ்வரி !

இரண்டாவது இடத்தில கயல் தொடர் பெற்று உள்ளது. சீரியல் துவங்கிய சிறிது நாட்களானாலும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது இந்த தொடர். குடும்பத்திற்காக போராடும் மகள், தன்னை சுற்றி போடப்படும் சூழ்ச்சி முடிச்சுகளை கட்டவிழ்த்து திறமையாக வெற்றி பெரும் கதைக்களத்தை கொண்டுள்ள இது ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

மேலும் செய்திகளுக்கு ...சிறுநீரகம் செயலிழப்பு உயிருக்கு போராடும் பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரி

மூன்றாவது இடத்தை விஜய் டிவியில் ஒளிபரப்பாக வரும் பாக்கியலட்சுமி தொடர் பெற்றுள்ளது. விவாகரத்து பெற்றதை அடுத்து திருமணத்திற்காக கோபி தயாராகி வருவதும், பாக்கியலட்சுமி சமையல் ஆர்டரை முடித்துக் கொடுக்கமாக செயல்பட்டு வருவதுமாக இந்த தொடர் சற்று சுவாரஸ்யம் கூடிய உள்ளது. இதனால் முன்பை வெட்ட இதன் டிஆர்பி அதிகரித்துள்ளது. 

மேலும் செய்திகள்: மூன்று நாள் தேடல்... நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா... ரசிகர்களிடம் கேள்வி எழுப்பிய அஜித்..! வைரல் வீடியோ!

நான்காவது இடத்தை சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீண்ட நெடு தொடரான ரோஜா பெற்றுள்ளது. ஐந்தாவது இடத்தை  பாரதிகண்ணம்மா தொடர் பெற்று உள்ளது. முன்னதாக ஐந்து இடங்களுக்குள் வராத பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது தீவிரவாதிகள் எபிசோடு நடைபெற்று வருகிறது. மருத்துவமனையை தீவிரவாதிகள் கைப்பற்றுகின்றனர். அதோடு அந்த தீவிரவாதிகளில் ஒருவரை கண்ணம்மா கொலை செய்து விடுகிறார். இவ்வாறு திரைப்பட ரேஞ்சுக்கு ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மாவை ரசிகர்கள் கவனிக்க துவங்கியதே மீண்டும் ஐந்து இடத்திற்குள் பாரதி கண்ணம்மா சீரியல் வர காரணம்.

இதற்கிடையே விரைவில் பிக்பாஸ் 6 ஒளிபரப்பாக உள்ளதால் சன் டிவி உள்ளிட்ட சீரியல்களை அதிகமாக ஒளிபரப்பு செய்யும் சேனல்கள் தங்களது நாடகங்களில் சுவாரஸ்சியத்தை கூட்ட பல அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. அதோடு புதிய புதிய சீரியல் களையும் களம் இறக்க தயாராகி வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கிரிஷ் விவகாரத்தில் யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த முத்து.. ஆடிப்போன மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
ஜனனியின் புது பிசினஸுக்கு வந்த சிக்கல்... குடைச்சல் கொடுக்க ரெடியான ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது