Indian 2 Audio Launch : பிரபல நடிகர் உலக நாயகன் கமல் நடிப்பில் வெளியாகவுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றது.
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுடைய நடிப்பில் உருவாகி உள்ள அடுத்த திரைப்படம் தான் இந்தியன் 2. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்து வந்த நிலையில் எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி உலக அளவில் இந்த திரைப்படம் வெளியாகும் என்கின்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது.
உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடைய ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் இருந்து ஏற்கனவே இரு பாடல்கள் வெளியாகின நிலையில் இன்று சென்னை நேரு ஊருக்கு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் இந்திய 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
The blockbuster & happening duo. 🤩🔥 & at the INDIAN-2 Audio Launch! 🎉 🇮🇳 Ulaganayagan 🇮🇳 🇮🇳 … pic.twitter.com/ePRByGBpif
— Lyca Productions (@LycaProductions)இந்தியன் 2 படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவரும் இந்த விழாவில் பங்கேற்ற நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக வளம் வந்து கொண்டிருக்கும் நெல்சன் திலீப்குமார் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று படம் குறித்து பேசினார்.
The iconic Ulaganayagan Kamal Haasan ✨ is here for the INDIAN-2 🇮🇳 Audio Launch, creating ripples of excitement and admiration. 🤩 Senapathy is back! 🤞🏻 🇮🇳 Ulaganayagan … pic.twitter.com/amEPs6VdLf
— Lyca Productions (@LycaProductions)இந்தியன் 2 திரைப்படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் உள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், நடிகர்கள் நாசர், தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், மூத்த தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றனர்.