
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருபவர் விஷால். சமீப காலமாக இவர் நடித்த படங்கள் எதுவும் சரிவர வெற்றிபெறவில்லை. இதனால் தான் அடுத்ததாக நடித்துள்ள லத்தி படத்தை மலைபோல் நம்பி உள்ளார் விஷால். இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார்.
விஷாலின் நண்பர்களான நந்தா மற்றும் ரமணா ஆகியோர் இப்படத்தை தயாரித்து உள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வருகிற செப்டம்பர் மாதம் இப்படத்தை திரையரங்குகள் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனிடையே லத்தி படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதையும் படியுங்கள்... நான் இருக்கும்போது இன்னொருத்தி கேக்குதா... நடிகையுடன் காரில் கிஸ் அடித்தபடி சென்ற நடிகரை புரட்டி எடுத்த மனைவி
இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதில் ஏழை மாணவ, மாணவிகள் 5 பேரின் கல்விச் செலவுக்காக காசோலை ஒன்றை வழங்கி உதவினார் நடிகர் விஷால்.
அவர் தான் லத்தி படத்தின் டீஸரையும் வெளியிட்டார். அந்த டீசரில் நடிகர் விஷாலை அடிக்க நூற்றுக்கணக்கான வில்லன்கள் ஆக்ரோஷமாக தேடுகின்றனர். அவர்களை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதை நிறைய ஆக்ஷன் காட்சிகளுடன் காட்டி உள்ளனர்.
இந்த விழாவில் பேசிய உதயநிதி, விஷால் படங்களில் முதலில் கமிஷனராக நடித்தார், அப்புறம் அசிஸ்டண்ட் கமிஷ்னராக நடித்தார் இப்போ புரமோட் ஆகி கான்ஸ்டபில் ஆகி இருப்பதாக கிண்டலடித்தார். மேலும் நடிகர் சங்க கட்டிடத்தை காரணம் காட்டி விஷால் கல்யாணம் பண்ணாம சுத்திக்கிட்டு இருப்பதாக கூறிய உதயநிதி, படத்தின் டீஸர் மாஸாக இருப்பதாக பாராட்டினார்.
இதையும் படியுங்கள்... Actor Karthi : என்ன லவ் பண்ணவே விடல... 6 வருஷம் தேடியும் பொண்ணு கிடைக்கல - சீக்ரெட் தகவலை வெளியிட்ட கார்த்தி
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.