Udhayanidhi Stalin : இந்தி படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய உதயநிதி... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்

By Ganesh A  |  First Published Jul 17, 2022, 8:01 PM IST

Udhayanidhi Stalin : ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலமாக பல்வேறு படங்களை வாங்கி வெளியிடும் உதயநிதி தற்போது இந்தி படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளார்.


தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி, தயாரிப்பாளராக திரையுலகில் அறிமுகமானார். முதலில் படங்களை தயாரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர். அடுத்ததாக நடிகராகவும் களமிறங்கினார். அந்த வகையில் எம்.ராஜேஷ் இயக்கிய ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் ஹீரோவானார் உதயநிதி.

இப்படம் ஹிட்டானதால் அடுத்தடுத்து படங்களில் நடிக்கத்தொடங்கிய உதயநிதி வெற்றிகரமான நடிகராகவும் வலம் வந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் களமிறங்கிய உதயநிதி, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாகை சூடி எம்.எல்.ஏ ஆனார். இதையடுத்து அவர் நடிப்புக்கு முழுக்கு போட்டு அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... Neelima : உங்க உள்ளாடை சைஸ் என்ன... கொச்சையாக கேள்வி கேட்ட நபருக்கு செருப்படி பதில் அளித்த நடிகை நீலிமா

undefined

திமுக கடந்தாண்டு ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழகத்தில் வெளியான முன்னணி நடிகர்களின் படங்கள் பெரும்பாலானவற்றை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் வெளியிட்டு வருகிறது. ரஜினியின் அண்ணாத்த படத்தில் தொடங்கி, சமீபத்தில் மாதவன் இயக்கத்தில் வெளியான ராக்கெட்ரி வரை இவர் வெளியிட்ட படங்கள் ஏராளம்.

இதுதவிர அடுத்த சில மாதங்களில் வெளியாக உள்ள ஏராளமான படங்களின் வெளியீட்டு உரிமையையும் இவர் கைப்பற்றி வருகிறார். அந்த வகையில் இந்தியில் அமீர்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் லால் சிங் சட்டா படத்துடைய தமிழ் பதிப்பின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளார். இப்படம் ஆக்ஸ்ட் 11-ந் தேதி ரிலீசாக உள்ளது. இந்தி எதிர்ப்புக்கு எதிராக பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வரும் கட்சியில் இருந்துகொண்டே அவர் ஒரு இந்தி படத்தை வாங்கி வெளியிடுவது அக்கட்சிக்காரர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

இதையும் படியுங்கள்... ஒருவழியாக ரிலீசுக்கு தயாரானது.. திரிஷா, அரவிந்த் சாமி நடித்த சதுரங்க வேட்டை 2 - எப்போ திரைக்கு வருது தெரியுமா?

click me!