
நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது 44 வது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார். இதனையொட்டி, பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அதோடு அஜித் வலிமைதயாரிப்பாளர் போனிகபூர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
பாலிவுட்டில் சூப்பர் ஹிட் அடித்த ‘ஆர்டிகிள் 15’படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை உதயநிதி நடிப்பில் போனிகபூர் தயாரிக்கவுள்ளார்.
இதற்கிடையே தன்னுடைய பிறந்த நாளன்று பேனர் வைப்பது பாலாபிஷேகம் செய்வது போன்ற தேவையில்லாத செயல்களில் ஈடுபடுவதற்கு பதிலாக அதற்கு செலவு செய்யும் பணத்தை ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யுங்கள் என தமிழ் ரசிகர் மன்றங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அஜித், விஜயுடன் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும் என்றால் என்ன கேட்பீர்கள் என கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளித்துள்ள உதயநிதி ; விஜய் பார்த்தால் எப்படி இன்னமும் இளமையாகவே இருக்கிறீர்கள் என கேட்பேன். அஜித்தை பார்த்தால் ரசிகர் மன்றமே இல்லாமல் எப்படி உங்களால் இப்படி மாஸ் காட்ட முடிகிறது? எப்படி பர்பெக்ட் ஜென்டில்மேனாக இருக்கிறீர்கள் என்று கேட்பேன் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.