
தல அஜித்தின் வலிமை படம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அதிகம் எதிர்பார்ப்புகளை கொடுத்த படமாகும். இந்த படத்தின் அப்டேட்டை வெளியிட வேண்டும் என அஜித் ரசிகர்கள் பெரிய போராட்டத்தையே செய்து விட்டனர். பிரதமர் முதல் விளையாட்டு வீரர் வரை அனைவரிடமும் வலிமை அப்டேட் குறித்து கோரிக்கை விடுத்து விட்டனர் அஜித் ரசிகர்கள். இது குறித்து ரசிகர்களை கண்டித்திருந்தார் தல அஜித்.
வலிமை படபிடிப்பு முழுதும் சில மாதங்களுக்கு முன் நிறைவு செய்யப்பட்டது. இதனால் விஸ்வாசம் - பேட்ட போன்று ரஜினி படமும், அஜித் படமும் தீபாவளிக்கு மோதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த படம் மட்டுமே ரிலீஸ் செய்யப்பட்டது. பின்னர் 2022-ம் ஆண்டு பொங்கலுக்கு வலிமை படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்தார். ஆனால் தேதி என்னவென்று அவர் உறுதியாக்கவில்லை.
"நேர்கொண்ட பார்வை" வெற்றியை தொடர்ந்து போனி கபூர்,வினோத்,அஜித் குடடணியில் வலிமை உருவாக்கி வருகிறது. இதை தொடர்ந்து முன்றாவது முறையாக தல 61 வது படமும் இதே கூட்டணியில் அமையவுள்ளதாக சொல்லப்பப்படுகிறது. ஆனால் முஹல் மூன்று படங்களுக்கு இசையமைத்த யுவனுக்கு பதிலாக தல 61-ல் அனிரூத் இசையமைக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
வலிமை படத்தின் ரிலீஸ் தேதியே இன்னும் உறுதி செய்யப்படாத போது அஜித்தின் அடுத்த படமான தல 61 அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.