Yogi Babu |சூப்பர் 5 மொழியிலா? மாஸ் காட்டும் யோகி பாபு!!

By Kanmani PFirst Published Nov 28, 2021, 11:08 AM IST
Highlights

Yogibabu | 5 தென்னிந்திய மொழிகளில் நடிகர் யோகி பாபு நடித்துள்ள "பன்னி குட்டி" படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. காமெடியான இருந்து நாயனாக உயர்ந்து வரும் யோகி பாபு நடித்த மண்டேலா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து  தற்போது இவர் பீஸ்ட், வலிமை, அயலான், வீரமே வாகை சூடும் போன்ற படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். 

இதற்கிடையே பேய் மாமா, பன்னி குட்டி, பொம்மை நாயகி போன்ற படங்களில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் கிருமி படத்தை இயக்கிய அனுசரன் பன்னி குட்டி படத்தை இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் கருணாகரன், சிங்கம் புலி, திண்டுக்கல் ஐ.லியோனி, டைகர் தங்கதுரை, KPY ராமர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே இசையமைத்துள்ளார், சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவி முருகையா கதை எழுதியுள்ளார்.

2020 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம் கொரோனா பெருந்தொற்றால் தள்ளிப் போனது. தற்போது படம் முடிந்த நிலையில், அதன் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா திரையரங்கு வெளியீட்டு உரிமையை 11 : 11 புரொடக்ஷன்ஸ் டாக்டர் பிரபு திலக் வாங்கியுள்ளார். இதனை லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் தெலுங்கு நீங்கலாக மற்ற மொழிகளில் யோகிபாபுவின் 'பன்னிக்குட்டி' வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

click me!