
தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமாகி, பின்னர் நடிகராக அவதாரம் எடுத்தவர் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில், இவர் ஏற்கனவே நடித்து வெளியான திரில்லர் கதையம்சம் கொண்ட, 'சைக்கோ' படத்தின் வெற்றிக்கு பின்னர், மீண்டும் த்ரில்லர் ஜர்னரில்... நடித்துள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே' மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம், ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து.. பாக்ஸ் ஆபிசில் கலக்கியாதா என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
உதயநிதி 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய மு.மாறன், இயக்கத்தில் நடித்த திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. இப்படத்தில் நடிகை ஆத்மிகா அவருக்கு ஜோடியாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில்... பிரசன்னா, ஸ்ரீகாந்த், பூமிகா, வசுந்தரா, சதீஷ், சுபிக்ஷா, பழ கருப்பையா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சித்து குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
உதயநிதி, முழு நேர அரசியலில் கவனம் செலுத்த உள்ளதால்... இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் திரைப்படம் தான், தன்னுடைய கடைசி திரைப்படம் என கூறிய நிலையில், அந்த படத்திற்கு முன்பாகவே உதயநிதி நடித்து முடித்த, இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாவே இருந்தது. இந்நிலையில் நேற்று இப்படம் வெளியானதில் இருந்தே தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், பலர் உதயநிதி தரமான, எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.
மேலும் இப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் குறித்து வெளியாகியுள்ள தகவலில், தமிழகத்தில் மட்டுமே ஒரே நாளில் 2.15 கோடியும், உலக அளவில் மற்ற இடங்களில் 35 லட்சம் ரூபாயும் வசூலித்துள்ளதாம். படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதாலும், அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதாலும், வசூல் அதிகரிக்கும் என படக்குழுவினர் நம்பைக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.