டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் நடிகர்கள் சிரஞ்சீவி, அவரது மகன் ராம் சரண் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது பெற்றதற்கு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் நடிகர்கள் சிரஞ்சீவி, அவரது மகன் ராம் சரண் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது பெற்றதற்கு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய திரைப்படமான ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் இசைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: மும்பையில் வீட்டை தொடர்ந்து... அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கிய நடிகர் சூர்யா! விலை மட்டும் இத்தனை கோடியா?
இந்த நிலையில் ஆஸ்கர் விருது பெற்ற பிறகு முதல் முறையாக இந்தியா வந்த ராம்சரண், தனது தந்தை சிரஞ்சீவியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ரஜினிகாந்தை போல்.. ராணாவுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சைநடந்துள்ளதா? கண் பார்வை பாதிப்பு! இளம் வயதில் இரு ஆபரேஷன்
Truly an honour to meet our Honourable Home Minister Ji at the Conclave.
Thank you sir for appreciating the efforts of team 🙏 https://t.co/YvjdOLzqUk
மேலும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது பெற்றதற்கு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுக்குறித்து ராம்சரண் தனது டிவிட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்தில் மகிழ்ச்சி. ஆர்.ஆர்.ஆர். படகுழுவினரின் முயற்சியைப் பாராட்டியதற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.