
பிரபல காமெடி நடிகர் மயில்சாமி நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவரது பிறந்தநாளுக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி கொடுத்து, ஜமாய்த்துள்ளார்.
மேலும் செய்திகள்: சமந்தா - நயசைத்தன்யா பிரிவு குறித்து... கனத்த இதயத்துடன் நாகர்ஜுனா வெளியிட்ட உருக்கமான தகவல்..!
"Article 15" தமிழ் பதிப்பாக உருவாகும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கின்றார். கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் (Tanya Ravichandran) நடிக்கின்றார். தற்போது பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் மயில்சாமி தனது பிறந்தநாளை இயக்குனர் அருண்ராஜா காமராஜ் (Arun Raja Kamaraj), நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினருடன் இணைந்து மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அனைவரும் தங்களது வாழ்த்துக்களை நடிகர் மயில்சாமிக்கு தெரிவித்தனர்.
நடிகர் மயில்சாமி தனது பிறந்த நாளை முன்னிட்டு 300 குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வழங்கினார். மேலும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மயில்சாமியின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி வழங்கினார். மயில்சாமி கேக் வெட்டி கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: பொங்கி வழியும் சினேகன் - கன்னிகா காதல்... வலியை பொறுத்துக்கொண்டு மாறி மாறி என்ன செஞ்சிருக்காங்க பாருங்க!!
Zee Studios மற்றும் போனி கபூர் அவர்களின் Bayview Projects வழங்க ROMEOPICTURES வெளியிடும் இப்படத்தை இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.