
ராஜமௌலி இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள 'RRR ' திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அதிகார பூர்வமாக தெரிவித்திருந்த நிலையில், பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகள்: பொங்கி வழியும் சினேகன் - கன்னிகா காதல்... வலியை பொறுத்துக்கொண்டு மாறி மாறி என்ன செஞ்சிருக்காங்க பாருங்க!!
எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக கொண்டு “RRR ” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம் சரண், மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் ஹீரோவாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் (Ajay Devgm), பாலிவுட் நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி (Samuthirakani), ராகுல் ராமகிருஷ்ணா (Rahul Ramakrishna), அலிசான் டூடி (Alison doody) உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி (Keera Vani) இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். சுமார் 350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில், விறுவிறுப்பாக இப்படம் உருவாகி உள்ளது.
இந்த படத்தின் மோஷன் போஸ்டர், மேக்கிங் வீடியோ, மற்றும் நட்பு பாடல் என அனைத்திற்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அக்டோபர் மாதம் படம் ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்திருந்தனர். ஆனால் தியேட்டர்கள் அனைத்தும் திறந்த பிறகே படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்: நடிகை சமந்தாவிற்கு சொந்தமாக இத்தனை சொகுசு கார்கள் உள்ளதா? விலையை பார்த்து ஷாக் ஆகிடாதீங்க..!!
இந்நிலையில், சற்று முன்னர் 'RRR ' படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி மாதம் 7 ஆம் தேதி, இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல், ராஜ மௌலியின் பிரமாண்ட படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.