ஒரே சமயத்தில் விவாகரத்தை அறிவித்த சமந்தா - நாக சைதன்யா!! என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா?

Published : Oct 02, 2021, 05:05 PM IST
ஒரே சமயத்தில் விவாகரத்தை அறிவித்த சமந்தா - நாக சைதன்யா!! என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா?

சுருக்கம்

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா (Samantha). தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் (Nagarjuna) மகன் நாக சைதன்யாவும் (Naga chaitanya), சமந்தாவும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், 2017ம் ஆண்டு இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றது.  

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும், சமந்தாவும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், 2017ம் ஆண்டு இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்: காதல் கணவர் நாக சைதன்யாவை பிரிவதை உறுதி செய்த சமந்தா..!!

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த சமந்தா, முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து நடித்தார். அதே நேரத்தில் சில சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களும் இவரது தேர்வாக இருந்தாலும், அதில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி சர்வதேச அளவில் கூட பாராட்டை பெற்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான, 'ஃபேமிலி மேன் 2 ' வெப் சீரிஸுக்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல் வாதிகள் மத்தியில் மிகவும் விமர்சிக்கப்பட்டாலும் பின்னர் இவருடைய நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

நாக சைதன்யாவும், சமந்தாவுக்கு இணையாகவே பல வெற்றி படங்களை தெலுங்கு திரையுலகில் கொடுத்து வருகிறார். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான 'லவ் ஸ்டோரி' படத்திற்கும் நல்ல விமர்சனங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சமந்தா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இருந்து குடும்ப பெயரை நீக்கியத்தில் இருந்தே விவாகரத்து சர்ச்சை எழுந்த நிலையில், நாளுக்கு நாள் இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் அதிகம் பேசப்பட்டு வந்தது.

மேலும் செய்திகள்: நடிகை சமந்தாவிற்கு சொந்தமாக இத்தனை சொகுசு கார்கள் உள்ளதா? விலையை பார்த்து ஷாக் ஆகிடாதீங்க..!!

 

இதுகுறித்து, சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருமே தொடர்ந்து அமைதி காத்து வந்தனர். ஒருமுறை சமந்தாவிடம் இதுகுறித்து திருப்பத்தில் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது புத்தி இருக்கா? இது கோவில் என காட்டமாக பதிலளித்தார். அதே போல் நாக சைதன்யாவும் விவாகரத்து கேள்விக்கு சற்று மழுப்பலாகவே பதில் கூறி வந்தார்.

மேலும் செய்திகள்: மகன் ஷிவின் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடிய ரம்பா!! 45 வயசுலயும் ஹீரோயின் லுக்கில் மின்னுரங்களே!!

இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து தங்களுடைய விவாகரத்தை உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து இவர்கள் கூறியுள்ளதாவது....

எங்கள் நலனை விரும்பும் அனைவருக்கு இதை தெரிவிக்கிறோம்...

"நிறைய ஆலோசனை செய்த பிறகு, சிந்தித்து இந்த முடிவை எடுத்துள்ளோம். கணவன் -மனைவி உறவில் இருந்து பிரிந்து செல்ல முடிவு செய்திருக்கிறோம். தொடர்ந்து எங்களுடைய நட்பு நீடிக்கும். அது எப்போதும் எங்களுக்கிடையில் ஒரு சிறப்பான பிணைப்பை வைத்திருக்கும் என்று நம்புவதாக இருவருமே தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்: காதலரோடு திருமணத்திற்கு ஷாப்பிங் செய்யும் 'ராஜா ராணி' சீரியல் நடிகை வைஷாலி!! வைரலாகும் போட்டோஸ்!!

இந்த கடினமான நேரத்தில் எங்களுக்கு ஆதரவளிக்கவும், ரசிகர்கள் நலன் விரும்பிகள் மற்றும் ஊடகங்கள் அனைவரின் ஆதரவிற்கும் நன்றி என தெரிவித்துள்ளார்". சமந்தா - நாக சைதன்யாவின் விவாகரத்து முடிவு தற்போது டோலிவுட், மற்றும் கோலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சந்தானம் என் சகோதரன் : மறைந்த டாக்டர் சேதுராமனின் மனைவி உருக்கம்: கண்கலங்க வைக்கும் பின்னணி!
நண்பன் வெங்கடேஷுக்காகக் கொள்கையை மாற்றிய பாலகிருஷ்ணா: விஸ்வரூபமெடுக்கும் 'வாவ்' கூட்டணி!