
விஜய் ,அஜித், கமல் என பல முன்னணி ஹீரோக்கள்ளுடனும் ஜோடி சேர்ந்து விட்டார் திரிஷா, தற்போது தீபாவளிக்கு ரிலீஸ் ஆகா உள்ள கொடி படத்திலும் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும், சமீப காலமாக பேய் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தார், தொடர்த்து அரண்மனை படத்தில் பேய்யாக நடித்தார் அந்த படத்தில் அவரது நடிப்பு எல்லாராலும் பாராட்டபட்டது.
அதே போல் நாயகி, தற்போது மோகினி போன்று தொடர்ந்து இதே போன்ற கதைகளிலேயே ஆர்வம் காட்டி வந்தார்.
தற்போது இது பற்றி கூறியுள்ள திரிஷா...... தற்போது தான் நடிக்கும் படங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்து வருவதாகவும், எல்லா வேடங்களிலும் திறமையை வெளிப்படுத்தவே பேய் படங்களிலும் நடித்ததாக கூறியுள்ளார் .
ஆனால் தற்போது அதில் நிறைவு பெற்றிருப்பதால், இனி பேய் பேய் படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் மோகினி தான் கடைசி படம் என தெரிவித்துள்ளார்.
இனி முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடிப்பேன் என்றும், கதை பிடித்திருந்தால் அறிமுக இயக்குனர்கள் படத்திலும் நடிப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.