ஒவ்வொரு காலகட்டத்திலும் திரை இசைப் பாடல்களை தாண்டி வேறு சில பாடல்களும் தொடர்ச்சியாக மக்களால் ரசிக்கப்பட்டு வருவதுண்டு. அந்த வகையில் கடந்த சில காலமாக சிறுசுகள் மற்றும் பெரியவர்கள் வரை vibe செய்யும் ஒரு பாடல் தான் உருளைக்கிழங்கு செல்லக்குட்டி என்ற பாடல்.
இந்த பாடல் கடந்த சில காலமாகவே வெகுஜன மக்களால் விரும்பப்பட்ட வருகின்றது, இது குழந்தை பாடல் என்றாலும், மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகி வருகின்றது. குறிப்பாக மீம் creatersகளுக்கு இது பெரு லேட்டஸ்ட் ட்ரெண்டிங்காக மாறியுள்ளது என்று தான் கூறவேண்டும்.
சரி இந்த குழந்தைகள் பாடலை பாடியது யார் தெரியுமா? இவரும் ஒரு பாடகர் தான், அவர் பெயர் மது சௌந்தர், பாடகியும் மற்றும் இன்ஸ்டாகிராம் influencerமான மது தன் குரலில் ஒலித்த இந்த உருளைக்கிழங்கு செல்ல குட்டி பாடல் தற்போது மிகப் பெரிய அளவில் ட்ரெண்டாகி வருவது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை போட்டுள்ளார்.
பொதுவாக ரைம்ஸ் பாடும்பொழுது உங்களின் குரலை பெரிய அளவில் மாற்ற வேண்டி இருக்கும், நாம் சிரமப்பட்டு பாடிய பாடல் இது, ஆனால் நாம் பட்ட சிரமத்திற்கு கடவுள் என்றாவது ஒரு நாள் மிகப்பெரிய பலனை தருவார், அதுபோல எனக்கு இந்த பாடல் அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். ஆனால் இவர் இந்த பாடலை பாடியது சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு என்பது தான் ஆச்சரியப்பட வைக்கும் ஒரு விஷயம்.
சரி யார் இந்த மது சௌந்தர் குறித்து வேறென்ன சுவாரசியம் என்று கேட்டால், திரை உலகில் ஓரிரு பாடல்களை பாடி பிரபலம் அடைந்துவரும், பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று மாபெரும் புகழை அடைந்த பாடகர் சக்தி அமரன் தான் இவருடைய கணவர்.
இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த நிலையில் இருவரும் ஒன்றாக இணைந்து பல பேட்டிகளில் பேசி உள்ளனர். தற்பொழுது திரைப்படங்களிலும் பாடிவரும் சக்தி அமரனும், மது சௌந்தரும் மிகச் சிறந்த பாடகர்கள் என்பது நிரூபணமாகியுள்ளது.
மயூவுக்காக இனியாவை கலங்க வைத்த கோபி..! மகனை வைத்து போடும் புது பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?