'தனி ஒருவன் 2' ஹீரோயின் நயன்தாரா.. ஜெயம் ரவியை தேடி வரும் வில்லன் இவரா? எகிறும் எதிர்பார்ப்பு!

By manimegalai a  |  First Published Aug 29, 2023, 12:24 AM IST

ஜெயம் ரவி நடிக்கும் தனி ஒருவன் 2 திரைப்படம் உருவாவது குறித்த அறிவிப்பு இன்று வெளியான நிலையில், இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடிக்க உள்ள அந்த நடிகர் பற்றிய தகவல் யூகிப்பின் அடிப்படையில் வெளியாகியுள்ளது.
 


வெற்றிப் படங்களை தேர்வு செய்து தயாரித்து வரும், முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 26-வது திரைப்படமாக 'தனி ஒருவன் 2'-வை அறிவித்துள்ளனர்.  கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'தனி ஒருவன்' திரைப்படத்தின் எட்டாவது ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

'ஜெயம்', 'எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி', 'உனக்கும் எனக்கும்', 'சந்தோஷ் சுப்ரமணியம்', 'தில்லாலங்கடி', 'தனி ஒருவன்', என ஆறு வெற்றி படங்களை தொடர்ந்து வழங்கி இந்திய அளவில் சாதனை படைத்துள்ள சகோதரர்களான இயக்குநர் மோகன் ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும் ஏழாவது முறையாக 'தனி ஒருவன் 2' திரைப்படத்திற்காக இணைகின்றனர். 

Tap to resize

Latest Videos

'தனி ஒருவன் 2' ஜெயம் ரவியின் புதிய புரோமோவுடன் படத்தின் மிகப்பெரிய ட்விஸ்டை உடைத்த மோகன் ராஜா!

தனி ஒருவன் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவியும் நயன்தாராவும் 'தனி ஒருவன் 2'-க்காக மோகன் ராஜா இயக்கத்தில் மீண்டும் இணைகின்றனர். மக்கள் மனதில் முத்திரை பதிக்கும் அழுத்தமான படங்களை தொடர்ந்து இயக்கி வரும் மோகன் ராஜாவும், சவாலான வேடங்களில் சளைக்காமல் நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆதரவையும் பெற்றுள்ள நடிகர் ஜெயம் ரவியும் ஒரு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இணைவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சிறந்த உள்ளடக்கம் மற்றும் உயர்தர தயாரிப்பு என முத்திரை பதித்துள்ள ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட், 'தனி ஒருவன் 2' அதன் மற்றுமொரு மைல்கல்லாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இப்படத்தின் கிரியேடிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தியும் நிர்வாக தயாரிப்பாளராக எஸ் எம் வெங்கட் மாணிக்கமும் பணியாற்றுகின்றனர். 

இது என்னடா 'ஜெயிலர்' படத்திற்கு வந்த சோதனை! அதிரடியாக நீக்கப்படும் காட்சி...உயர் நீதிமன்றம் உத்தரவு!
 
சர்வதேச தரத்தில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்ற உள்ளார்கள். நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தயாரிப்பு நிறுவனத்தால் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் என் முன்னாள் காதலன்! குணசேகரனை தூக்கி எறிந்துவிட்டு ஜீவானந்தத்தை தேடி செல்லும் ஈஸ்வரி! அதிரடி திருப்பம்!

முதல் பாகத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாக சித்தார் அபிமன்யூவாக அரவிந்த் சாமி செம்ம டஃப் கொடுத்த நிலையில், இரண்டாவது பாகத்தில், ஜெயம் ரவையை தேடி வரும் அந்த வில்லனாக பகத் ஃபாசில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான வேலைக்காரன் படத்தில் பகத் நடித்துள்ளார். அதே போல் மாமன்னன் படத்தின் வெற்றிக்கு பிறகு இவர், ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இவர் நடிக்க நிறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

click me!