Latest Videos

முடிவுக்கு வந்த பல வருட காத்திருப்பு.. சோலோவாக வருகின்றது டாப் ஸ்டாரின் "அந்தகன்" - லேட்டஸ்ட் அப்டேட்!

By Ansgar RFirst Published Jun 27, 2024, 11:17 PM IST
Highlights

Andhagan : பிரபல நடிகர் டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் உருவாகியுள்ள "அந்தகன்" திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது என்ற தகவல் இப்பொது வந்துள்ளது.

தமிழ் திரை உலகில் "தல", "தளபதி" என்கின்ற மோதல் போக்கு நிலவுவதற்கு முன்னரே, ஹீரோவாக கோலிவுட் உலகில் வலம் வந்தவர் தான் பிரசாந்த். சண்டை பயிற்சி, குதிரை ஏற்றம், ஸ்கேட்டிங் மற்றும் நடனம் என்று அனைத்தையும் முறையாக கற்றுக்கொண்டு சினிமா துறைக்கு வந்த வெகு சில நடிகர்களில் ஒருவர் பிரசாந்த். 

கடந்த 1990ம் ஆண்டு தமிழில் வெளியான "வைகாசி பொறந்தாச்சு" என்கின்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பிரசாந்த், 90களின் இறுதியில் "டாப் ஸ்டார்" என்ற பட்டத்தோடு, டாப் நாயகனாக வலம் வந்தார். குறிப்பாக 1996ம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான "கல்லூரி வாசல்" என்கின்ற திரைப்படம் மெகா ஹிட் திரைப்படமாக மாறியது. 

நாடக காதல்.. கொதிக்கும் நடிகர் ரஞ்சித்.. "சார் அப்போ உங்க கல்யாண வாழ்க்கை" - வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

இந்த திரைப்படத்தில் தல அஜித் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் "ஜீன்ஸ்", "கண்ணெதிரே தோன்றினாள்", "ஜோடி", "குட் லக்", "பார்த்தேன் ரசித்தேன்", "பிரியாத வரம் வேண்டும்", "மஜ்னு", "தமிழ்" மற்றும் "வின்னர்" என்று இவர் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் திரைப்படங்களாக மாறியது. 

இந்த சூழ்நிலையில் தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய குடும்பத்தில் ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாக திரைத்துறை பக்கம் பெரிய அளவில் வராமல் இருந்த நடிகர் பிரசாந்த், தற்பொழுது தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்தது. 

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு அஸ்திவாரம் போடப்பட்ட அவருடைய "அந்தகன்" திரைப்படம் தற்பொழுது வெளியாக உள்ளது. முதலில் இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் மோகன்ராஜ் இயக்கவிருந்த நிலையில், அவர் படத்தை விட்டு வெளியேறினார். அதன் பிறகு ஜே ஜே பிரட்ரிக் இந்த திரைப்படத்தை கையில் எடுத்து, பின் அவரும் அதை கைவிட்டார். 

இறுதியாக பிரசாந்த் அவர்களுடைய தந்தை தியாகராஜன் அவர்களே தன்னுடைய மகனின் படத்தை இயக்கி பெருந்தொற்று காலத்தில் மிகவும் சிரமப்பட்டு, தற்பொழுது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இந்த திரைப்படத்தை திரையரங்களில் வெளியிடவிருக்கிறார். படக்குழு இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது.

It's time for Top Star Entry 🌟

Finally August Release in Cinemas 💥 pic.twitter.com/hM2C1pzpks

— Karthik Ravivarma (@Karthikravivarm)

இந்த திரைப்படத்தில் மூத்த தமிழ் திரைப்பட நடிகர் கார்த்திக், பிரபல நடிகை சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, மூத்த தமிழ் திரையுலக இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மறைந்த நடிகர் மனோபாலா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

Swathistha : அட நம்ம ஆண்டவரின் "ரீல் மருமகளா" இது? சேலையில் கவர்ச்சி புயலாய் மாறிய சுவாதிஸ்தா - Hot Clicks!

click me!