கோர விபத்தில் சிக்கி இளம் நடிகை பரிதாப பலி... ஹோலி கொண்டாடி விட்டு திரும்பியபோது நேர்ந்த சோகம்

By Asianet Tamil cinema  |  First Published Mar 20, 2022, 1:35 PM IST

Gayathri Accident: நடிகை காயத்ரி உயிரிழந்த செய்தி அறிந்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது மறைவுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


சோகத்தில் முடிந்த ஹோலி கொண்டாட்டம்

டோலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருபவர் காயத்ரி. யூடியூப் மூலம் பிரபலமான இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார். இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஐதராபாத்தில் நடந்த ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். அங்கு நண்பர்களுடன் ஆடிப்பாடி விளையாடி மகிழ்ந்த காயத்ரி, இரவில் பப்புக்கு சென்று பார்ட்டி கொண்டாடி உள்ளார்.

Tap to resize

Latest Videos

விபத்துக்கான காரணம் என்ன?

இதையடுத்து நள்ளிர நண்பர்களுடன் காரில் வீட்டுக்கு கிளம்பி உள்ளார் காயத்ரி. கட்சிபவுலி என்கிற இடத்தின் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கி கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டி வந்த நடிகை காயத்ரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருக்கு வயது 26. அவர் அதிவேகமாக காரை ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

நடிகை உயிரிழப்பு

நடிகை காயத்ரியுடன் காரில் பயணித்தவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நடிகை காயத்ரி உயிரிழந்த செய்தி அறிந்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது மறைவுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை காயத்ரியின் கார் சாலை ஓரம் இருக்கும் தடுப்பின் மீது மோதி பறந்து வந்து விழுந்ததில் அருகில் உள்ள ஓட்டலில் தோட்ட வேலை செய்து வந்த மகேஸ்வரி என்கிற 38 வயது பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

இதையும் படியுங்கள்... sudha kongara : சூர்யா - பாலா படத்தில் இணையும் சுதா கொங்கரா! இதென்னப்பா புது டுவிஸ்டா இருக்கு

click me!