Valimai movie fourth week: 4வது வாரமும் வீர நடை போடும் அஜித்தின் வலிமை..வெற்றி களிப்பில் ரசிகர்கள்..!

Published : Mar 20, 2022, 12:43 PM IST
Valimai movie fourth week: 4வது வாரமும் வீர நடை போடும் அஜித்தின் வலிமை..வெற்றி களிப்பில் ரசிகர்கள்..!

சுருக்கம்

Valimai movie fourth week: அஜித்தின் நடிப்பில், கடந்த மாதம் 24ஆம் தேதி, திரையரங்குகளில் வெளிவந்த  திரைப்படம்  வலிமை.

எச்.வினோத்  இயக்கத்தில்அஜித் (Ajith) நடித்துள்ள வலிமை திரைப்படம், கடந்த 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அஜித்திற்கு ஜோடியாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். 

இணைந்துள்ள நட்சத்திர பட்டாளங்கள்:

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகியுள்ள, இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ளார் . இப்படத்தில், வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்துள்ளார். மேலும், குக் வித் புகழ் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். 

இதில் கதை, பாடல்கள் என அனைத்தையும் தாண்டி அஜித்தின் பைக் ரேஸ் காட்சிகள் ரசிகர்கள் பலரால் பெரிதும் கொண்டாடப்பட்டது. தியேட்டர் முன் குவிந்த அஜித் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், அஜித்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடினர்.  

வலிமை வசூல் விவரம்:

ரசிகர்களின் வரவேற்பை தொடர்ந்து வலிமை திரைப்படம் தமிழ்நாடு வசூலில் புதிய சாதனை படைத்திருந்தது. வலிமை, முதல் நாளிலேயே ரூ. 36 கோடி வசூல் செய்து மாஸ்டர், அண்ணாத்த போன்ற படங்களின் சாதனைகளை இப்படம் முறியடித்திருந்தது. 

வெளியான முதல் மூன்று நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூல் செய்து சாதனை பெற்றது. அதுமட்டுமின்றி,  தற்போது வரை 200 கோடி ரூபாய்க்கு மேல் வலிமை செய்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. 

4 வாரம் கடந்தும் மவுஸு குறையாத வலிமை:

வலிமை வெளிவந்த 4 வாரம் ஆகும் நிலையில், சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் வலிமை படம்  46 திரையரங்கில் 92 ஷோ ஓடிக்கொண்டு இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. 4 வாரம் கடந்து 46 திரையரங்கில் வலிமை படம் ஓடிக்கொண்டு இருப்பது மாபெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் படிக்க...Prabhas health issues: பாகுபலி பிரபாஸுக்கு ஏற்பட்ட சோகம்...பாதியில் நின்ற சாலார் படப்பிடிப்பு..?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Ajith: அஜித் படம் மூலம் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கும் ஷாலினி... சர்ப்ரைஸாக வெளிவந்த AK 64 பட டைட்டில்..!
Top 10 Big Budget Movies: கோடி கோடியாய் கொட்டி எடுக்கப்பட்ட இந்தியாவின் டாப் 10 மெகா பட்ஜெட் மூவீஸ்!