Prabhas health issues: பாகுபலி பிரபாஸுக்கு ஏற்பட்ட சோகம்...பாதியில் நின்ற சாலார் படப்பிடிப்பு..?

Anija Kannan   | Asianet News
Published : Mar 20, 2022, 12:07 PM IST
Prabhas health issues: பாகுபலி பிரபாஸுக்கு ஏற்பட்ட சோகம்...பாதியில் நின்ற சாலார்  படப்பிடிப்பு..?

சுருக்கம்

Prabhas health issues: பாகுபலி நடிகர் பிரபாஸ் நடித்த ''ராதே ஷ்யாம்'' திரைப்படம் கடந்த வாரம், திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. 

பாகுபலி நடிகர் பிரபாஸ் நடித்த ''ராதே ஷ்யாம்'' திரைப்படம் கடந்த வாரம், திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. 

தெலுங்கு திரையுலகில், கடந்த 2000 ஆம் வெளியான ஈஸ்வர் படம் மூலம்  நடிகராக அறிமுகமானவர் பிரபாஸ்.  பின்னர் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் தேடி ரொமாண்டிக் படமான சத்ரபதி, புஜ்ஜிகாடு, வர வர்ஷம் , பில்லா, டார்லிங், மிஸ்டர் பெர்பெக்ட், மற்றும் மிர்ச்சி உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்தார். 

ஏழு பிலிம்பேர் விருதுகள்:

பிரபாஸ் மிக குறுகிய காலத்திலேயே இதுவரை ஏழு பிலிம்பேர் விருதுகள், SIIMA விருது மற்றும் நந்தி விருது உள்ளிட்ட விருதுகளை வாங்கி குவித்துள்ளார். இருப்பினும், இவரை உலகம் முழுவதும் புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது, எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம். 

பாகுபலி பிரபாஸ்:

இரண்டு பாகங்களாக வெளியான பாகுபலி திரைப்படத்தில், முதல் பாகத்தில் அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்தியராஜ் ஆகியோர் மாஸ் காட்டியிருந்தனர். இதையடுத்து ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு வெளியான இரண்டாம் பாகமும்  ₹ 1,000 கோடி வசூலித்த, முதல் இந்தியத் திரைப்படம் என்னும் பெயரை பெற்றது.

'ராதே ஷ்யாம்'' திரைப்படம்:

சமீபத்தில், பாகுபலி நடிகர்  பிரபாஸ்ஸின் ''ராதே ஷ்யாம்'' வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. முன் பதிவில் மட்டும் ஐதராபாத்திரல் 4 கோடி ரூபாய் படம் வசூலித்திருந்தது. மேலும், பிரபாஸ்ஸின் ராதே ஷ்யாம் படத்தின் டீசர், ட்ரைலர், பாடல்கள் சிறப்பான வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பாதியில் நின்ற சாலன் படப்பிடிப்பு:

'ராதே ஷ்யாம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு, பிரபாஸ் நடிப்பில் கேஜிஎஃப்’ படத்தின் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சலார். இதில், பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இப்படத்தின், முதற்கட்டப் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது, படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கியிருந்தது. இந்த படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட  ஐந்து மொழிகளில்வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக, சாலன் படப்பிடிப்பில், பிரபாஸ் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

பிரபாஸ் அறுவை சிகிசைக்கு ஸ்பென்ஸ் செல்கிறாரா..?

சமீபத்தில் பிரபாஸுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சிறிய அறுவை செய்து கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். எனவே, மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் அறுவை சிகிக்சைக்காக பிரபாஸ் ஸ்பென்ஸ் செல்லவுள்ளார். மேலும், அறுவை சிகிசைக்கு பிறகு முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதனால், ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். 

மேலும் படிக்க...Election result: நடிகர் சங்க தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை! விஷால் அணியா? பாக்யராஜ் அணியா? வெற்றி யாருக்க


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!