sudha kongara : சூர்யா - பாலா படத்தில் இணையும் சுதா கொங்கரா! இதென்னப்பா புது டுவிஸ்டா இருக்கு

By Asianet Tamil cinema  |  First Published Mar 20, 2022, 12:11 PM IST

sudha kongara : நடிகர் சூர்யா அடுத்ததாக பாலா இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் சூர்யாவுடன் கீர்த்தி சுரேஷ், அதர்வா, கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
 


சக்சஸ்புல் ஹீரோ சூர்யா

தமிழ் திரையுலகில் சக்சஸ்புல் ஹீரோவாக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. பாண்டிராஜ் இயக்கிய இப்படத்தில் நடிகர் சூர்யா ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்து வெற்றி வாகை சூடி உள்ளார். இப்படம் வெளியான 5 நாட்களிலேயே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

Tap to resize

Latest Videos

இந்நிலையில், நடிகர் சூர்யா அடுத்ததாக பாலா இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் சூர்யாவுடன் கீர்த்தி சுரேஷ், அதர்வா, கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

மீண்டும் சூர்யா படத்தில் சுதா கொங்கரா

இந்நிலையில், இப்படத்தில் பிரபல இயக்குனர் சுதா கொங்கராவும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சூர்யாவை வைத்து சூரரைப் போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா, தற்போது அதன் இந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார். அவர் சூர்யா - பாலா படத்தில் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் மீனவர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனையை மையமாக வைத்து தயாராக உள்ளதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் பணிகளை முடித்த பின்னர் சுதா கொங்கரா சூரரைப் போற்று இந்தி ரீமேக் பணிகளை கவனிக்க உள்ளாராம்.

இதையும் படியுங்கள்... மகன்களுக்காக எழுதிய தாலாட்டு பாடலை கச்சேரியில் பாடிய தனுஷ்! கேட்டதும் மெய்சிலிர்த்து போன இளையராஜா- வைரல் video

click me!