புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த டைட்டானிக் பட நடிகர் டேவிட் வார்னர் காலமானார் - சோகத்தில் ரசிகர்கள்

Published : Jul 26, 2022, 12:29 PM IST
புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த டைட்டானிக் பட நடிகர் டேவிட் வார்னர் காலமானார் - சோகத்தில் ரசிகர்கள்

சுருக்கம்

David Warner : டைட்டானிக் பட நடிகர் டேவிட் வார்னரின் மறைவு திரைத்துறையினரையும், அவரது குடும்பத்தினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

பழம்பெரும் ஹாலிவுட் நடிகரான டேவிட் வார்னர் காலமானார். அவருக்கு வயது 80. பிரிட்டனை சேர்ந்த இவர் உலகப்புகழ் பெற்ற டைட்டானிக் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். ஏராளமான படங்களில் வில்லனாகவும் மிரட்டி உள்ள இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.

50 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் நடித்து வந்த டேவிட் வார்னர், ஒரு மேடை நாடக கலைஞர் ஆவார். ஆரம்ப காலகட்டத்தில் நாடகங்களில் சிறந்து விளங்கிய இவருக்கு, அதன்மூலமே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. அதனை சரிவர பயன்படுத்திக் கொண்ட டேவிட் வார்னர் வெற்றிகரமான நடிகராக வலம் வந்தார்.

இதையும் படியுங்கள்... கமல் படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டான உதயநிதி - அட... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே...! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

நடிகர் டேவிட் வார்னர் கடைசியாக மேரி பாப்பின்ஸ் ரிட்டர்ன்ஸ் என்கிற படத்தில் நடித்திருந்தார். கடந்த 2018-ம் ஆண்டு ரிலீசான இப்படத்தில் ஓய்வுபெற்ற கப்பற்படை அதிகாரியாக நடித்திருந்தார் டேவிட் வார்னர். இதன்பின் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் படங்களில் நடிக்காமல் ஓய்வெடுத்து வந்த இவருக்கு கடந்தாண்டு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதற்காக பல்வேறு சிகிச்சைகளை அவர் எடுத்துவந்த போதிலும் அது பலனளிக்காமல் மரணமடைந்தார். நடிகர் டேவிட் வார்னரின் மறைவு திரைத்துறையினரையும், அவரது குடும்பத்தினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இவரின் மறைவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள்... அஞ்சலிக்கு என்ன ஆச்சு? எலும்பும் தோலுமாக ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறிட்டாரே! ஷாக்கிங் போட்டோஸ்..

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

காந்தாராவை அடிச்சு தூக்கிய துரந்தர்... இந்த ஆண்டு அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள் இவைதான்!
கொற்றவைக்கு விபூதியடித்த ஆதி குணசேகரன்... ஜனனிக்கு சீக்ரெட் சொல்லும் விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது