சூர்யா விருது வெல்வார் என ஜோசியர் சொன்னபோது நம்பவே இல்லை.. சிவகுமாரின் சுவாரஸ்ய பேட்டி..

By Kanmani P  |  First Published Jul 25, 2022, 8:34 PM IST

வாரணம் ஆயிரம் படத்தில் அப்பாவின் இறந்த உடல் கீழே இருக்க, மகன் மேலே அம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பார் அம்மா 'அப்பா கிளம்புகிறார்' என்று சொல்லும் அந்த காட்சியில் நானே இறந்து சுடுகாடு போவது போல் இருந்தது என கண்கலங்கி பேசி உள்ளார் நடிகர் சிவகுமார்.


நேற்று சூர்யா தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு பிறந்த நாள் பரிசாக தேசிய விருதும் கிடைத்திருந்தது. சமீபத்தில் நடைபெற்ற 68 வது தேசிய விருதுகள் விழாவில் தமிழ் சினிமாவிற்கு பத்து தேசிய விருதுகள் கிடைத்தன. சுமார் 11 ஆண்டுகளுக்கு பின் தமிழ் திரையுலருக்கு அதிக விருதுகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 இதற்கு முன் 2011 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு 11 தேசிய விருதுகள் கிடைத்திருந்தன. தற்போது 10 விருதுகள் கிடைத்துள்ளது. அதன்படி சூர்யாவின் சூரரை போற்று படத்திற்கு  ஐந்து விருதுகள், வசந்த இயக்கிய சிரஞ்சீவியும் இன்னும் சில பெண்களுக்கு மூன்று விருதுகள், யோகி பாபு நடித்த மண்டே படத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு...நிர்வாண போஸ் கொடுத்த ரன்வீர் சிங்...வழக்கு பதிவு செய்த போலீசார்!

அதன்படி சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், அபர்ணா பாலமுருளிக்கு சிறந்த நடிகைக்கான விருதும், சுதா கொங்காராவுக்கு சிறந்த திரைக்கதைக்கான விருதும், ஜிவி பிரகாஷுக்கு சிறந்த பின்னணி இசைக்காண விருதும், சூரரைப் போற்று படத்திற்கு சிறந்த படத்திற்கான விருதும் கிடைத்துள்ளது. இது குறித்து பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிறந்தநாள் வாழ்த்துக்களோடு தேசிய விருது வாழ்த்தும் பெற்று சூர்யா கொண்டாட்டத்தில் உள்ளார். 

இந்நிலையில்  சூர்யா குறித்து இவரின் தந்தையும் பழம்பெறும் நடிகருமான சிவகுமார் பேசிய பேட்டி ஒன்று, தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் சூர்யா கல்லூரி படிக்கும் போது தனது வீட்டிற்கு வந்த ஜோசியர் ஒருவர், 'இவர் கலைத்துறையில் சிறந்து விளங்குவார் என்றும், சிறந்த நடிகராகவும், அதிகம் சம்பாதிக்க கூடியவராகவும், அதிக விருதுகளையும் வெல்வார் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...அடுத்தடுத்து வெளியாகும் தனுஷ் பட சூப்பர் அப்டேட்..டபுள் ட்ரீட் கொடுத்த வாத்தி டீம்

இதைக்கேட்ட சிவகுமாரும் அவரது மனைவியும் சிரித்ததாகவும் இது சாத்தியமே இல்லை என கூறியதாகவும் பெரியவனா? சின்னவனா? என கேட்டதாகவும் கூறியுள்ளார். ஆனால் 1991ல் ஜோசியர் சொன்னது போலவே 1997 இல் சூர்யாவிற்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் இந்த அளவிற்கு சூர்யா வருவார் என்பது சாத்தியமில்லை என தானும் தன் துணைவியாரும் நினைத்தாகவும்  கூறுகிறார்.

மேலும் சூர்யா நடித்ததில் நந்தா படமே தனக்கு மிகவும் பிடித்த படம். அந்த படத்தில் தாயின் பாசத்திற்காக ஏங்கும் பிள்ளையாக சூர்யா நடித்திருப்பார். அம்மா சாப்பாட்டில் விஷம் வைத்து விட்டார் என்று தெரிந்துமே சிரித்துக் கொண்டே அவர் சாப்பிடுவது இன்றும் தன் கண்களில் நிற்கிறது என கூறியுள்ளார். அதோடு  இதுவரை தமிழ் சினிமாவில் யாருமே உடம்பை வருத்தி இழைத்து நடித்ததில்லை சூர்யா கண்ணம்  ஒட்டி கண்கள் உள்ளே போக நடித்திருக்கிறார். 

 மேலும் செய்திகளுக்கு...வலிமை பட நாயகி ஹூமா குரேஷியின் ஓவர் ஹாட் போட்டோஸ்

இதுபோல நடிக்க பல நடிகர்கள் முன் வர மாட்டார்கள். வாரணம் ஆயிரம் படத்தில் அப்பாவின் இறந்த உடல் கீழே இருக்க, மகன் மேலே அம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பார் அம்மா 'அப்பா கிளம்புகிறார்' என்று சொல்லும் அந்த காட்சியில் நானே இறந்து சுடுகாடு போவது போல் இருந்தது என கண்கலங்கி பேசி உள்ளார் நடிகர் சிவகுமார்.

click me!