இயக்குனர் வெளியிட்டுள்ள பதிவில் தனுஷின் வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஜூலை 27 ஆம் தேதியும் டீசர் 28ஆம் தேதியும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் போஸ்டரும் வெளியாகி உள்ளது.
டாப் ஹிட் நாயகரான தனுஷ் தற்போது டோலிவுட்டில் களமிறங்கி உள்ளார். அந்த படத்திற்கு வாத்தி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வெங்கி அட்லூரி என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் மாஸ்டர் ,ஸ்டூடென்ட் என தனுஷ் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இதன் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் இசை அமர்வில் தனுஷ் உடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து சில கனமான நடனங்களை எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...கத்ரீனா கைஃப்-விக்கி கௌஷலுக்கு மிரட்டல் விடுத்த நபர்..போலீசில் புகார் அளித்த நட்சத்திர ஜோடி
வாத்தி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. படத்தை விரைவில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதில் தனுசுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன் மற்றும் மாறன் படங்களை அடுத்து தனுசுடன் ஜிவி பிரகாஷ் கூட்டணி ஆறாவது முறையாக இணைந்துள்ளனர்.
தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இது படமாக்கப்படுகிறது. தனுஷ் படத்திலிருந்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெளியிட்டுள்ள பதிவில் தனுஷின் வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஜூலை 27 ஆம் தேதியும் டீசர் 28ஆம் தேதியும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் போஸ்டரும் வெளியாகி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு...அடுத்தடுத்து வெளியாகும் தனுஷ் பட சூப்பர் அப்டேட்..டபுள் ட்ரீட் கொடுத்த வாத்தி டீம்
மேலும் செய்திகளுக்கு...வலிமை பட நாயகி ஹூமா குரேஷியின் ஓவர் ஹாட் போட்டோஸ்
இந்த படத்தோடு தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், ஹாலிவுட்டில் தி க்ரே மே ன் மற்றும் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இதில் தி க்ரே மேன் விரைவில் வெளியாக உள்ளது. இதற்கான ப்ரொமோஷன் வேலைகள் படுவேகமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து வெளியான இரண்டு சிங்கிள்களும் பட்டையை கிளப்பின . தங்கமகன் படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து அனிருத் - தனுஷ் கூட்டணி அமைந்துள்ளது.