கொலை செய்ய திட்டம் போடும் 4 பேர்..! காவல் நிலையத்தில் புகார் கொடுத்த ரவுடி பேபி சூர்யா..!

Published : Jun 26, 2021, 05:10 PM IST
கொலை செய்ய திட்டம் போடும் 4 பேர்..! காவல் நிலையத்தில் புகார் கொடுத்த ரவுடி பேபி சூர்யா..!

சுருக்கம்

சமூக வலைத்தளங்களில் இருக்கும் நான்கு பேர் கொண்ட கும்பல் தன்னை கொலை செய்ய திட்டம் போடுவதாக, ரவுடி பேபி சூர்யா காவல் நிலையத்தில் அலறி அடித்து கொண்டு புகார் கொடுத்துள்ளார்.  

சமூக வலைத்தளங்களில் இருக்கும் நான்கு பேர் கொண்ட கும்பல் தன்னை கொலை செய்ய திட்டம் போடுவதாக, ரவுடி பேபி சூர்யா காவல் நிலையத்தில் அலறி அடித்து கொண்டு புகார் கொடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்: வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆரம்பக்கால வரலாற்றை கூறும் 'மேதகு'..!
 

இன்று காலை தான் எம்.எம்.கே முகைதீன் இப்ராஹிம் என்பவர், ஜி.பி.முத்து, ரவுடி பேபி சூர்யா போன்றவர்கள் கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக வீடியோ வெளியிட்டு வருவதாக கூறி, ஜி.பி.முத்து மீது புகார் கொடுத்த நிலையில், இந்த பிரச்சனை முடிவதற்குள் தன்னை சிலர் கொலை செய்ய முயற்சிப்பதாக டிக் டாக்கில் கண்டமேனிக்கு பேசி பிரபலமான ரவுடி பேபி சூர்யா தற்போது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இவர் தற்போது திருப்பூர் மாவட்டம், அய்யம்பாளையம் என்ற பகுதியில்  வசித்து வருகிறார். லைக்குகளை பெற வேண்டும் என்பதற்காக தடை செய்யப்பட்ட செயலியான டிக்டாக் உபயோகத்தில் இருந்த போது,  ஆபாசத்திற்கு பஞ்சம் இல்லாத வகையில், உடை அணிந்து இடுப்பை ஆட்டி ஆட்டி டான்ஸ் ஆடி பல்வேறு விமர்சனத்திற்கு ஆளானவர். தன்னை விமர்சிப்பவர்களையும் விட்டு வைக்காமல் கண்டமேனிக்கு கெட்டவார்த்தை பேசி வீடியோ வெளியிட்டு பிரபலமானார். 

மேலும் செய்திகள்: 150 கோடியில் இவ்வளவு வசதிகளுடன் கட்டப்படுகிறதா தனுஷின் புதிய வீடு..? ஆச்சர்யப்பட வைக்கும் தகவல்..!
 

இவருக்கு கிடைத்தது நெகடிவ் ஃபேம் என்றாலும், சில குறும்படங்களில் கிடைக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் அவ்வப்போது யுடியூபில் அத்துமீறும் அளவிற்கு பேசியும் வாங்கி கட்டிக்கொள்கிறார். இவரது தொல்லை தாங்க முடியாமல் நெட்டிசன்களும் இவரை வாயிக்கு வந்தபடி வசைபாடுவது வழக்கம் தான். 

இது ஒருபுறம் இருக்க, தன்னை சுமார் 4 பேர் கொண்ட கும்பல், கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக அவர்களுக்குள் பணப்பரிமாற்றம் நடைபெற்றதாகவும் நல்லூர் காவல் நிலையத்தில், சூர்யா புகாரளித்துள்ளார் எந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Anikha Surendran : சேலையில் காந்தப் பார்வையால் மயக்கும் குட்டி நயன் 'அனிகா' சுரேந்திரன்.. குவியும் லைக்ஸ்
Rakul Preet Singh : அழகிய தீயே.. நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் ஹாட் போட்டோஸ்!!