#vijaythuppakkiதுப்பாக்கி 9 ; ட்ரண்டாகும் விஜய், விக்ரம், சங்கர் கலந்து கொண்ட வெற்றி கொண்டாட்ட புகைப்படங்கள்

Kanmani P   | Asianet News
Published : Nov 13, 2021, 11:21 AM ISTUpdated : Nov 13, 2021, 11:22 AM IST
#vijaythuppakkiதுப்பாக்கி 9 ; ட்ரண்டாகும் விஜய், விக்ரம், சங்கர் கலந்து கொண்ட  வெற்றி கொண்டாட்ட புகைப்படங்கள்

சுருக்கம்

துப்பாக்கி படத்தின் வெற்றி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இன்றளவும் அதிக ரசிகர் பட்டாளத்தை தன் வசம் வைத்துள்ள நடிகர் விஜய். தளபதி என்று அழைக்கப்படும் விஜயின் திரைப்பயணம் 1984-ல் துவங்கியது. குழந்தை நட்ஷத்திரமாக வெற்றி படத்தில் நடித்திருந்தார். குழந்தை நட்ஷத்திரமாக பல படங்களில் கலக்கி வந்த விஜய் 1992-ம் ஆண்டில் தனது தந்தையான சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்தார். அப்போது அவருக்கு வயது 18. இவர் நடிப்பில் அப்போது வெளிவந்த தேவா. பெரிதும் பேசப்பட்ட படமாக இருந்ததோடு 100 நாட்கள் திரை கண்டு சாதனையும் படைத்திருந்தது. ரொமாண்டிக் ஹீரோவாக 90 களில் அறியப்பட்ட விஜய் பின்னர் ஆக்சன் ஹீரோவாக பரிமானித்தார்.

இவர் நடிப்பில் வெளியான திருமலை, கில்லி, குருவி, உள்ளிட்ட படங்கள் ஆக்சன் ஹீரோவாக இவரை வெளிக்காட்டியது. இதை தொடர்ந்து வெளியான ஜில்லா, துப்பாக்கி, கத்தி, சர்க்கார்.பிகில்,மாஸ்டர், போன்ற படங்கள் விஜய்க்கு மாஸ் வெற்றியை பெற்று தந்தன.  தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் உடைத்து வருகிறார்.

இந்நிலையில் விஜயின் துப்பாக்கி 9-ம் ஆண்டு நிறைவடைந்துள்ளது.  கடந்த 2012ம் ஆண்டு வெளியாகி மாஸ் செய்த ஒரு படம் ஏ.ஆர். முருகதாஸ்இயக்கித்தில் வெளியாகி தாறுமாறாக   வெற்றியை பெற்று கொடுத்தது. 

உலகம் முழுவதும் ரூ. 130 கோடி வசூல், தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 72 கோடிக்கு வசூலித்திருந்தது, ரூ. 44 கோடிக்கு தமிழ்நாட்டில் ஷேர் வந்தது. இப்படி படம் நிறைய சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது, படம் வெளியாகி இன்றோடு 9 வருடங்கள் ஆகிவிட்டன.


 
இதை கொண்டாடும் விதமாக வழக்கம் துப்பாக்கி என்னும் ஒரு ஸ்பெஷல் ஹேஷ் டேக்கை உருவாக்கி  அதில் படத்தை பற்றிய நிறைய விஷயங்களை ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள். இந்த புகைப்படத்தில் துப்பாக்கி வெற்றி கொண்டாட்டத்தில் நடிகர் விக்ரம், இயக்குனர் சங்கர், உதயநிதி கலந்து கொண்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

துரந்தர் விமர்சனம் : ரன்வீர் சிங்கின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? இல்லை வேஸ்டா?
மதகஜராஜா முதல் டூரிஸ்ட் ஃபேமிலி வரை... 2025-ல் சர்ப்ரைஸ் ஹிட் அடித்த டாப் 5 தமிழ் மூவீஸ்