Jai Bhim: 'ஜெய்பீம்' படம் மாற்றத்திற்கான ஒரு உத்வேகம்..! படக்குழுவை பாராட்டிய சைலஜா டீச்சர்..!

By manimegalai aFirst Published Nov 13, 2021, 11:00 AM IST
Highlights

நடிகர் சூர்யா (Suriya) நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜெய்பீம்' (Jai Bhim) படத்தை பார்த்துவிட்டு கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சர் (Shailaja Teacher) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெகுவாக பாராட்டி பதிவிட்டுள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜெய்பீம்' படத்தை பார்த்துவிட்டு கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெகுவாக பாராட்டி பதிவிட்டுள்ளார்.

நடிகர் சூர்யா, தன்னுடைய மனைவி ஜோதிகாவுடன் இணைந்து  2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ள திரைப்படம் 'ஜெய் பீம்'.  படம் வெளியானது முதலே பல்வேறு தரப்புகளில் இருந்து தொடர்ந்து பாராட்டுகளை பெற்று வருகிறது. அதே சமயம் சிலர் தங்களுடைய கண்டனங்களையும் இந்த படத்தில் உள்ள சில காட்சிகளுக்கு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்: Shah Rukh Khan: புதிய மெய்காப்பாளரை தேடும் ஷாருகான்... ஏன்? ரவி சிங் சம்பளம் ஒரு மாதத்திற்கு இத்தனை லட்சமா..!

 

இயக்குனர் தா.செ. ஞானவேல் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'ஜெய் பீம்' திரைப்படம், கடந்த  1990 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில், வாழ்ந்த இருளர் சமூதாயத்தை சேர்ந்த ஒருவர் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல் குறித்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நீதிக்காக போராடிய வழக்கறிஞர் சந்துரு வேடத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார். மேலும் லிஜோமோல் செங்கேணி என்கிற வேடத்திலும், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான மணிகண்டன் ராஜாக்கண்ணு என்கிற வேடத்திலும் வாழ்ந்து நடித்துள்ளனர்.

மேலும் செய்திகள்: 38 வயதில் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஜய் டிவி சீரியல் நடிகை சந்திரா! வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்

 

ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதோடு, லாபத்தையும் ஈட்டி வரும் 'ஜெய் பீம்' திரைப்படம் குறிப்பிட்ட ஒரு சாதியினரை தாக்குவது போல் இருப்பதாகவும் பிரபல அரசியல் கட்சி தொடர்ந்து இந்த படத்திற்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது.

கடந்த 2ஆம் தேதி வெளியான 'ஜெய் பீம்' தமிழ், தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியான நிலையில்,  இந்த திரைப்படத்தை பார்த்த கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சர் தன்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் படக்குழுவிற்கு தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் போட்டுள்ள பதிவில்...  "ஜெய் பீம்" படம் மாற்றத்திற்கான ஒரு உத்வேகத்தை அளிக்கிறது சமூகத்தின் வன்முறை மற்றும் சமூக பாகுபாடு குறித்த கடினமான உண்மைகளின் சித்தரிப்பை வெளிப்படுத்துகிறது. பிரமாதமாக எடுத்துள்ளனர் என்று தன்னுடைய பாராட்டை தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

is an inspiration for transformative change. Authentic portrayal of hard-hitting realities on systemic violence & social discrimination in society. Brilliant performances. Congrats to the entire team!

— Shailaja Teacher (@shailajateacher)

 

click me!