நடிகர் அஜித்குமார், தென்காசி சாலையில் பைக் ரைடிங் செய்வதை பார்த்த ரசிகர் ஒருவர், பைக்கில் அவரை சேஸ் பண்ணி வந்து விடியோ எடுத்துள்ளார்.
நடிகர் அஜித் பைக் ரைடிங் மீது அதீத ஆர்வம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் ஓய்வு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் பைக்கை எடுத்துக்கொண்டு எங்காவது டிரிப் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதுமட்டுமின்றி உலகை பைக்கில் சுற்றிவர வேண்டும் என்பது அஜித்தின் நீண்ட நாள் கனவாக இருந்து வருகிறது. அதற்கான முயற்சியில் தற்போது இறங்கி உள்ளார் அஜித்.
அவரின் உலக பைக் ரைடின் முதல் அங்கமாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கு பைக் ரைடிங் செய்து முடித்துவிட்டார் அஜித். இதுகுறித்த ரூட் மேப் கூட சமீபத்தில் வெளியாகி வைரலானது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்க உள்ள ஏகே 62 படத்தில் நடிக்க தயாராகி வரும் அஜித். அப்படத்தில் நடித்து முடித்ததும் சினிமாவில் இருந்து பிரேக் எடுக்க திட்டமிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... திரையரங்குகளில் மாஸ்க் அணிவது கட்டாயம்! புத்தாண்டு கொண்டாட்ட விதிமுறை குறித்து அறிவித்த புதுச்சேரி அரசு!
பைக்கில் தென்காசிக்கு திடீர் விசிட் அடித்த அஜித்...! pic.twitter.com/LFuxmGxNUt
— Asianetnews Tamil (@AsianetNewsTM)அதன்படி அப்படத்தை முடித்ததும் தனது உலக பைக் டிரிப்பை ஆரம்பிக்க உள்ள அஜித், அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு எந்த படத்திலும் நடிக்காமல் தனது பைக் டிரிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம். தற்போது அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. பொங்கலுக்கு இப்படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், நடிகர் அஜித் பைக்கில் தென்காசிக்கு திடீர் விசிட் அடித்துள்ளார். அவர் தென்காசி சாலையில் பைக் ரைடிங் செய்வதை பார்த்த ரசிகர் ஒருவர், பைக்கில் அவரை சேஸ் பண்ணி வந்து விடியோ எடுத்துள்ளார். அப்போது அந்த ரசிகர்கரை பார்த்ததும் சல்யூட் அடித்துவிட்டு அஜித் பைக்கில் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் வருவாரா ரக்ஷிதாவின் கணவர்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!