அவசர அவசரமாக மருத்துவமனைக்குச் சென்ற அஜித், ஷாலினி... காரணம் இதுவா?

By Kanimozhi Pannerselvam  |  First Published May 23, 2020, 12:13 PM IST

இந்நிலையில் தல அஜித், மனைவி ஷாலினியுடன் மருத்துவமனைக்கு வந்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித்திற்கு சோசியல் மீடியாவில் அக்கவுண்ட் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அப்டேட் இல்லாமல் இல்லை. தல அஜித் மட்டுமில்லாது அவரது மனைவி ஷாலினி, மகன் மற்றும் மகளின் புகைப்படங்கள் கூட சோசியல் மீடியாவில் வைரலாகி விடுகிறது. அஜித் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி விடுகின்றனர். வலிமை பட அப்டேட்டிற்காக காத்திருந்த தல ரசிகர்கள் மத்தியில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: கையில் கிளாஸ் உடன் ஹாட் பிகினி போஸ்... ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த ஹன்சிகா...!

தல, அஜித் பொதுவாக அதிகம் வெளியிடங்களுக்கு செல்லமாட்டார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். தன்னுடைய படவிழாக்கள், திரையுலக கலை விழா என, அனைத்திலுமே தனக்கு கலந்து கொள்ள விருப்பம் இல்லை நாசுக்காக கூறி தவிர்த்து விடுவார். தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க:  கர்ப்பமாக இருப்பது உண்மை தான்... அம்மாவானதை உறுதி செய்தார் மைனா நந்தினி...!

கொரோனா ஊரடங்கு காரணமாக அப்படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டில் இருந்து வரும் நடிகர் அஜித்தும், அவரது மனைவி ஷாலினியும் மாஸ்க் அணிந்து கொண்டு தனியார் மருத்துவமனைக்கு வந்து சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின. இதனால் தல அஜித்தின் உடல் நிலை குறித்து அவரது ரசிகர்கள் மிகுந்த கவலை அடைந்தனர். 

Latest Thala sir video

| | pic.twitter.com/yYt2ZGX2cp

— Ajith (@ajithFC)

இதையும் படிங்க: லாக்டவுனால் மன அழுத்தம்...“வசந்த மாளிகை” பட நடிகை வாணிஸ்ரீ மகன் தற்கொலை?

இந்நிலையில் தல அஜித், மனைவி ஷாலினியுடன் மருத்துவமனைக்கு வந்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது. தல அஜித்திற்கு பல முறை ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. அப்படி செய்யப்பட்ட அறுவை சிகிச்சை தொடர்பாக மூன்று மாதத்திற்கு ஒருமுறை அஜித் பரிசோதனைக்கு செல்வது வழக்கமாம். அதற்காக தான் தல அஜித்தும், ஷாலினியும் மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் மருத்துவமனைக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

click me!