எந்த தடையும் இல்லை... 100 சதவீத பார்வையாளருக்கு அனுமதிக்கு கொடுத்த நீதிமன்றம்!!

By manimegalai aFirst Published Nov 8, 2021, 8:30 PM IST
Highlights

திரைப்படங்களுக்கு 100 சதவீத அனுமதி கொடுத்தால், மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. எனவே 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதும் உறுதியாகியுள்ளது.

திரைப்படங்களுக்கு 100 சதவீத அனுமதி கொடுத்தால், மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. எனவே 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதும் உறுதியாகியுள்ளது.

கொரோனா முதல் அலை காரணமாக, கடந்த இரண்டு வருடங்களாகவே சரி வர திரையரங்குகள் இயங்காமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும்... தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறைந்து, திரையரங்குகள், கேளிக்கை பூங்காக்கள், மால்கள் உள்ளிட்டவை பழைய நிலைக்கு திரும்பியுள்ளது.

கொரோனா பிரச்சனை காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக... மற்ற தொழிலாளர்களை விட அதிக நஷ்டத்தை சந்தித்தது திரையரங்க உரிமையாளர்கள் தான். கொரோனா இரண்டாவது அலை தலை தூக்கிய பின்னர், சுமார் 2 மாதங்களுக்கு பின் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில், திரையரங்கில் வெளியான, டாக்டர், உள்ளிட்ட படங்கள் வசூலில் கெத்து காட்டியது. இதுவரை வெளியான சிவகார்த்திகேயன் படங்களை விட, டாக்டர் படம் அதிக வசூல் சாதனை படைத்தது.

நவம்பர் 1 ஆம் தேதி முதல் திரையரங்கில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், தீபாவளியை முன்னிட்டு மிகப்பெரிய பட்ஜட்டில் உருவான அண்ணாத்த, எனிமி ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வசூலை ஈட்டி வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.  இந்நிலையில் , திரையரங்கில் விசேஷ நாட்களில் மக்கள் அதிகம் கூடினால், கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறி வரும் 3ம் தேதி… தீபாவளி பண்டிகைக்கு முந்தின நாள் மற்றும் தீபாவளி நாளான நவம்பர் 4ம் தேதி ஆகிய இரு நாட்களிலும் தமிழகத்தில் உள்ள தியேட்டர்களை மூட வேண்டும் என்று, திரையரங்கில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி தரவேண்டும் என பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தூத்துக்குடியை சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் என்பவர் தொடர்ந்திருந்தார்.

அவர் தாக்கல் செய்துள்ள தமது மனுவில் கூறி இருப்பதாவது: தமிழகம் முழுவதும் தற்போது திருவிழாகாலமாக இருக்கிறது. இந்த தருணத்தில் அரசின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்றுவார்களா என்பது சந்தேகமே. பாதிப்புகள் குறைந்ததால் தான் தியேட்டர்கள் 100 சதவீதம் பார்வையாளர்களுடன் இயங்கலாம் என்று அனுமதிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்றுகள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படவில்லை என கூறி இருந்தார்.

இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, இந்த மனுவை தள்ளுபடி செய்தார். இதனையடுத்து திரையரங்குகளில் அரசு அறிவிப்பின் படி 100 சதவீத அனுமதி தொடரும் என்பதும் உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!