படுக்கையறை காட்சிகள்... ஆபாசம்... அயோக்கியத்தனம்... ’காட்மேன்’நித்யானந்தாவின் கதை..?

By Thiraviaraj RMFirst Published May 28, 2020, 4:06 PM IST
Highlights

டேனியல் பாலாஜியின் உடை அலங்கராத்தை பார்க்கும்போது இது தலைமறைவாகியுள்ள நித்யானந்தாவின் கதையோ என தோன்றுகிறது. 

‘காட்மேன்’டீசரில் இடம் பெற்றுள்ள காட்சிகளும், வசனங்களும் இந்து மதத்தையும், பிராமண சமூகத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

சினிமாவின் அடுத்த தளம் வெப்சீரிஸ். இதற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் பல முன்னணி திரைப்பிரபலங்களும் இதில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜீ5 தளத்தில் ‘காட்மேன்’என்ற வெப்சீரிஸ் வெளியாக உள்ளது. ஜெயப்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க பாபு யோகேஸ்வரன் என்பவர் இத்தொடரை இயக்கியுள்ளார்.

இந்த சீரிஸின் டீசர் நேற்று வெளியானது. அதில் இந்து மதம் தொடர்பான காட்சிகளும், பிராமணர் சமூகம் குறித்த வசனங்களும், உச்சகட்ட ஆபாச காட்சிகளும் இடம் பெற்று இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சினிமா போன்று வெப்தொடர்களுக்கு தணிக்கை இல்லாததால் படைப்பாளிகள் தங்களின் படைப்பு சுதந்திரம் என்ற பெயரில் ஆபாச காட்சிகளையும், வன்முறை காட்சிகளையும் வலிய புகுத்தி வருவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். ஒரு காட்சியில், டேனியல் பாலாஜியின் உடை அலங்கராத்தை பார்க்கும்போது இது தலைமறைவாகியுள்ள நித்யானந்தாவின் கதையோ என தோன்றுகிறது. 

ஒரு பிராமணர் மட்டும் தான் வேதம் சாஸ்திரம் படிக்க வேண்டும் என எந்த சாஸ்திரமும் கூறியிருக்கிறது? என்னைச் சுத்தி இருக்குற எல்லா பிராமணர்களும் அயோக்கியர்களாக உள்ளனர். நீ வேதம் படிக்கும் பையனாக மாறப்போகிறாய் இந்த உலகத்துக்கு ஒரு பிராமணன் எப்படி இருக்க வேண்டும் என்று காட்டப்போகிறேன் என்றெல்லாம் வரும் வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.

 

சமீபகாலமாக இந்து மதம் தொடர்பாக இழிவு பேசுவதையும், இந்து மத கடவுள்களை அவமதிக்கும் விதமான காட்சிகள் சினிமாக்களில் அதிகம் இடம் பெறுவதாகவும், வேண்டுமென்றே சில திரைப்பிரபலங்கள் தங்கள் படங்களின் பப்ளிசிட்டிக்காக இதை திட்டமிட்டு செய்து வருவதாகவும் பல்வேறு இந்து மத அமைப்பை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
 

click me!