பிரபல நடிகரின் பிறந்தநாளில் எருமை மாட்டை பலி கொடுத்து ரசிகர்கள் செய்த அதிர்ச்சி செயல்!! போலீசார் விசாரணை!!

Published : Sep 04, 2021, 12:39 PM IST
பிரபல நடிகரின் பிறந்தநாளில் எருமை மாட்டை பலி கொடுத்து ரசிகர்கள் செய்த அதிர்ச்சி செயல்!! போலீசார் விசாரணை!!

சுருக்கம்

கன்னட திரையுலகில் அறிமுகமான சுதீப், தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், தன்னுடைய 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், இவரது ரசிகர்கள் எருமை மாட்டி வெட்டி பலி கொடுத்து பிறந்தநாளை கொண்டாடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கன்னட திரையுலகில் அறிமுகமான சுதீப், தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், தன்னுடைய 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், இவரது ரசிகர்கள் எருமை மாட்டி வெட்டி பலி கொடுத்து பிறந்தநாளை கொண்டாடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட நடிகரான  சுதீப், தமிழில் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'நான் ஈ' படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்தப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் சிம்புதேவன் இயக்கி வெளிவந்த புலி, பாகுபலி, என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். 

கன்னட படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்த இவர் தமிழில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 'முடிஞ்சா இவன புடி’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்தப் படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தாலும், தொடர்ந்து தமிழில் கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் அழுத்தமான கதாபாத்திரத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகர் கிச்சா சுதீப் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, மிகவும் பரபரப்பாக பேசப்படும் ஒருவராக உள்ளார். 

இவர் பல கமர்ஷியல் படங்களில் நடித்து வந்தாலும் ஒரு சில சமூக அக்கறை கொண்ட நிகழ்சிகளில் கலந்துக்கொண்டு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். கன்னட நடிகர், நடிகைகள் நலனுக்காகவும், படிக்கும் மாணவர்கள், மற்றும் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து, ரசிகர்களால் ரியல் ஹீரோவாக பார்க்கப்பட்டு வருகிறார். இவரது 50 ஆவது பிறந்தநாளை ரசிகர்கள் வெகு விமர்சியாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

அந்த வகையில், பெல்லாரி மாவட்டம் சந்தூர் என்கிற கிராமத்தில்... சுதீப்பின் பிறந்தநாளுக்கு விதவிதமாக கட்அவுட் மற்றும் போஸ்டர் அடித்து கொண்டாடிய ரசிகர்கள் சிலர், ஒரு எருமை மாட்டை அழைத்து வைத்து, அதனை பலி கொடுத்து, மாட்டின் ரத்தத்தை போஸ்டர்கள் மீது தெளித்து கொண்டாடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 25 ரசிகர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்களாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தன்னுடைய திரையுலக கதாநாயகன் அஜித் குமாரை சந்தித்த நடிகர் சிம்பு!
பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!