'தலைவி' பட நடிகை கங்கனா ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி!!

By manimegalai aFirst Published Sep 4, 2021, 11:31 AM IST
Highlights

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள, 'தலைவி' திரைப்படம் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடித்துள்ள நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள, 'தலைவி' திரைப்படம் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடித்துள்ள நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மறைந்த பழம்பெரும் நடிகையும், தமிழக அரசியல் களத்தில் சிங்க பெண்ணாக ஆட்சி செய்த, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் 'தலைவி'. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை பல இயக்குனர்கள் படமாக்க போட்டி போட்ட நிலையில், முதலில் படத்தை இயக்கி ரிலீஸ் செய்யவுள்ளார் இயக்குனர் ஏ.எல்.விஜய். ஏற்கனவே... 'குயின்' என்ற பேரில் ஜெயலலிதாவின், வாழ்க்கை வெப் சீரிஸாக எடுக்கப்பட்டதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது போலவே, இந்த படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதமே இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்ட நிலையில், திடீர் என கொரோனா இரண்டாவது அலை தலை தூங்கியதால், படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக படக்குழு அறிவித்தது. இதை தொடர்ந்து, தற்போது மீண்டும் கொரோனா தொற்று தமிழகத்தில் கட்டுக்குள் வந்துள்ளதால், அடுத்தடுத்த தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. கடந்த இரு வாரங்களாக புதிய படங்கள் ஏதும் ரிலீஸ் செய்யப்படவில்லை என்றாலும், அடுத்த வாரம் விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம், மற்றும் கங்கனா நடித்துள்ள 'தலைவி' படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.

இவ்விரு படங்களுக்கான புரோமோஷன் பணிகள் படு தூளாக நடந்து வருகிறது. அந்த வகையில், தற்போது... 'தலைவி' படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், சற்று முன்னர், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து மறைந்த திமுக தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி நினைவிடத்தில் கங்கனா மரியாதை செலுத்தியுள்ளார். ஆனால் அங்கு செய்தி சேகரிக்கவோ, புகைப்படங்கள் எடுக்கவோ, யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலர் இப்படம் வெற்றியடைய தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.


 

click me!