முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இயக்குநர் டி.பி.கஜேந்திரனை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தமிழில் எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டு தங்கம், பட்ஜெட் பத்மநாபன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் டி.பி.கஜேந்திரன். ஏராளமான படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் உடல் நலம் சரியில்லாத டி.பி.கஜேந்திரனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் தருணத்தில் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய கல்லூரி தோழனான டி.பி.கஜேந்திரனை காணச் சென்ற புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இயக்குநர் டி.பி.கஜேந்திரனை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் அவருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தலைமை நிலைய செயலாளர் பூச்சி எஸ். முருகன் இருந்தனர்.