இது வேற லெவல் பா... அனல் பறக்கும் “சாமி ஸ்கொயர்” மோஷன் போஸ்டர் இதோ...

 
Published : May 18, 2018, 02:59 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
இது வேற லெவல் பா...  அனல் பறக்கும் “சாமி ஸ்கொயர்” மோஷன் போஸ்டர் இதோ...

சுருக்கம்

The Saamy Square motion poster starring Chiyaan Vikram is out

சியான் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் சாமி 2  படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

விக்ரம், திரிஷா நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான சாமிபடம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஹரி இயக்கிய இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது `சாமி ஸ்கொயர்என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ள நிலையில், சமீபத்தில் கடைசி கட்ட படப்படிப்பு காரைக்கடியில் துவங்கி நடைபெற்று வருகிறது.

நேற்று வெளியான இந்த மோஷன் போஸ்டரில், சாமி படத்தின் ஓப்பனிங் காட்சியில் ரவுடி போல விக்ரம் அறிமுகமாகி, போலீஸ் என்ற பெயரில் அராஜகம் செய்யும் பொன்னம்பலத்துடன் சண்டை போட வருவார். அப்போது கைகள் மற்றும் உடலை முறுக்கெடுக்கும் அதே காட்சி ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பு பெற்றது. அதே காட்சியைத்தான் சாமி ஸ்கொயரின் மோஷன் போஸ்டரில் பயன்படுத்தியுள்ளனர்.

திருநெல்வேலி 3 கி.மீ என்றும், புதுடெல்லி 2726 கி.மீ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும் எல்லைக்கல்லில் விக்ரம் அமர்ந்தபடி இருக்கும் காட்சியைப் பார்க்கையில், சாமியில் ஆறுச்சாமியாக ஊருக்குள் நடக்கும் பிரச்சினைகளை சரிசெய்தவர், இதில் பிரச்சினை செய்துவிட்டு ஊரை விட்டுத் தப்பிக்கவிருக்கும் வில்லன்களைப் பிடிக்க எல்லைச்சாமியாக மாறியிருக்கிறார் எனத் தெரிகிறது.

இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்கின்றனர். மேலும் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வருகிற 17-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டது. இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைதளத்தில் டிரென்டாகி இருக்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!