ஸ்ரீதேவி மரணம் பகீர் ..! "240 கோடி காப்பீட்டு தொகைக்காக கொல்லப்பட்டாரா.?!

 
Published : May 18, 2018, 01:54 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
ஸ்ரீதேவி மரணம் பகீர் ..! "240 கோடி காப்பீட்டு தொகைக்காக கொல்லப்பட்டாரா.?!

சுருக்கம்

a turning point in ssridevi death

ஸ்ரீதேவி திட்டமிட்டு கொல்லப்பட்டார்..!

தனது உறவினர் திருமணத்திற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி அங்கு தங்கி இருந்த ஓட்டலில் மூழ்கி உயிரிழந்தார். 

அதிக மது போதையில் ஸ்ரீதேவி, அவர் தங்கி இருந்த ஓட்டல் குளியலறையில் மூழ்கி  உயிரிழந்ததாக கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தெளிவு படுத்தப்பட்டது

ஆனால் அவருடைய  மரணத்தில் சந்தேகம் உள்ளது என தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்திவரும் வேத் பூ‌ஷன் என்ற முன்னாள் டெல்லி துணை காவல் ஆணையர் சில தகவல்களை தனது ஆராய்ச்சிக்கு பின் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

அதாவது  ஸ்ரீதேவி மரணத்திற்கு பின், அவருடைய இறப்பில் சந்தேகம் உள்ளது எனவும்  240 கோடி காப்பீட்டு தொகைக்காக ஸ்ரீதேவி கொல்லப்பட்டிருக்கலாம் என்று இயக்குநர் சுனில் சிங் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மனுவை தள்ளுபடி செய்த  உச்சநீதிமன்றம்

‘ஐக்கிய அரபு நாடுகளில் விபத்து காரணமாக இறந்தால், 240 கோடி காப்பீட்டு தொகை கிடைக்கும் என்று இருக்கிறது. 5.7 அடி உயரமுள்ள ஸ்ரீதேவி எப்படி 5.1 அடி குளியல் தொட்டியில் மூழ்க முடியும்?’ என்று சந்தேகம் எழுப்பி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் தான் முன்னாள் டெல்லி துணை காவல் ஆணையர் சில தகவல்களை தனது ஆராய்ச்சிக்கு பின் வெளியிட்டு உள்ளார்

இதுபற்றி அவர் அளித்து இருக்கும் பேட்டியில், ‘ஸ்ரீதேவி மரணம் அடைந்த விதத்தை பார்த்தாலே அவரை திட்டமிட்டு கொலை செய்ததாக தெரிகிறது. மேலும் எந்த ஒரு எவிடென்சும் இல்லாமல் ஒருவரை குளியல் தொட்டியில் வலுக்கட்டாயமாக இறக்கி நீரில் மூழ்கடித்து அவர் மூச்சு நிற்கும் வரை அழுத்திப் பிடிக்கலாம்

அவ்வாறு செய்யும்போது தடயமே இல்லாமல் செய்துவிட்டு அது தானாக நடந்தது போன்று காண்பிக்க முடியும் என அவர் தெரிவித்து உள்ளார்

துபாய்  ஓட்டல் வரை சென்ற ஆராய்ச்சி

துபாயில் ஸ்ரீதேவி தங்கியிருந்த ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டலுக்கு சென்றோம். ஆனால் அவர் தங்கியிருந்த அறையில் எங்களை நுழையவிடவில்லை. இதன் காரணமாக பக்கத்துக்கு அறையில் தங்கி இருந்து விசாரணை நடத்தினோம்

கண்டிப்பாக வருடைய மரணத்தில் மர்மம் உள்ளது . அவர்கள்  எதையோ மறைக்கிறார்கள்.

துபாய் சட்டத்தை  நான் மதிக்கிறேன்.ஆனால் துபாய் காவல் துறை அளித்த தடவியல் அறிக்கை திருப்தி கரமாக இல்லை என அவர் தெரிவித்து உள்ளார்

எனவே ஸ்ரீ தேவி மரணத்தில் மர்மம் உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார்.மேலும் பல கேள்விகளுக்கு பதிலே கிடைக்க வில்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார். அதே சமயத்தில் ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர்  இது குறித்து வாய் திறக்கவே  இல்லை.

இந்த அறிக்கை தற்போது மேலும் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!