நிர்வாண காட்சியில் கேவலமாக நடித்திருக்கிறாய் என்று கூறி...! நடிகை 'ரவீயா பானு'க்கு கொலை மிரட்டல்...!

 
Published : May 18, 2018, 01:23 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
நிர்வாண காட்சியில் கேவலமாக நடித்திருக்கிறாய் என்று கூறி...! நடிகை 'ரவீயா பானு'க்கு கொலை மிரட்டல்...!

சுருக்கம்

therataning for actress raveeya banu

சென்னை, வடபழனி பகுதி திருநகரை சேர்ந்தவர் புதுமுக நடிகை தன்யா என்கிற ரவீயா பானு. 26 வயதாகும் இவர் இயக்குனர் கணேஷ் இயக்கிய படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது...

"நான் இயக்குனர் கணேசன் இயக்கிய '18.5.2009' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளேன். இலங்கையில் இசைபிரியா கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இந்தப் படம் இன்னும் வெளிவரவில்லை. தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறேன். இந்த நிலையில் என்னிடம் செல்போனில் பேசிய நபர் ஒருவர் எனக்கு கொலைமிரட்டல் விடுத்தார்.

அப்போது அவர் '18.5.2009' படத்தில் நிர்வாணமாக, கேவலமாக நடித்து உள்ளாய், என்று கூறி என்னை கொலை செய்துவிடுவேன் என பயமுறுத்தினார். 

தற்போது சென்னையில் நானும் என்னுடைய தாயாரும் தனியாக வசித்து வருவதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்த 'சைபர் க்ரைம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!