
சமீபத்தில் தொழிலதிபரான ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்துக் கொண்ட நடிகை சோனம் கபூர் அணிந்திருக்கும் மோதிரத்தின் விலையை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
பாலிவுட் நடிகை சோனம்கபூர் சமீபத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர் குடும்பத்தை சேர்ந்த ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்து கொண்டார்.
விரைவில் இவர் தனது கணவருக்கு சொந்தமான டெல்லியில் 3 ஆயிரத்து 170 சதுர அடியில் அமைந்துள்ள ஆடம்பர பங்களாவில் குடியேறப்போகிறார். இந்த அட்டகாசமான வீட்டின் மதிப்பு ரூ.173 கோடி என்கின்றனர்.
இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுடைய வீட்டின் மதிப்பு ரூ.160 கோடிதான். தொழில் அதிபரை மணந்துள்ள இன்னொரு நடிகையான ஷில்பா ஷெட்டி ரூ.100 கோடி மதிப்புள்ள வீட்டிலும், நடிகை கங்கனா ரணாவத் ரூ.30 கோடி மதிப்பு கொண்ட வீட்டிலும் வசிக்கின்றனர். சோனம்கபூர் பிரபல நடிகர் அனில்கபூரின் மகள். இந்த நிலையில் கூடுதல் தகவலாக நடிகை சோனம் கபூர் ரூ.90 லட்சம் மதிப்புள்ள மோதிரம் அணிந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த தகவலை கேட்டு பிற ஒட்டுமொத்த இந்திய நடிகைகள் பொறாமையால் வாய்பிளந்து நிற்கின்றனர். இரு வாரங்களுக்கு முன்புதான் சோனம் கபூருக்கு திருமணத்தின் போது அவரது கணவர் ஆனந்த் அஹுஜா இந்த விலை உயர்ந்த மோதிரத்தை அணிவித்தார் என்பது குறுப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.