பிரம்மாண்டம் எல்லாம் போதும்.. ஒரு பக்கா Commercial படம்.. களமிறங்கும் பிரபாஸ் - Raja Saab கம்மிங் சூன்!

By Ansgar R  |  First Published Jan 15, 2024, 10:59 AM IST

Prabhas in The Raja Saab : பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைக்கவுள்ளார்.


தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இயக்குனர் மாருதி என்பவர் முதல் முறையாக நடிகர் பிரபாஸை வைத்து இந்த திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். தெலுங்கு திரை உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்துவரும் பிரபாஸ் அவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய அளவில் எந்த திரைப்படமும் கை கொடுக்கவில்லை. 

சுருங்கச் சொன்னால் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படங்களின் இரண்டு பாகங்களுக்கு பிறகு பெரிய அளவில் ஹிட்டான திரைப்படங்கள் பிரபாஸுக்கு இதுவரை வரவில்லை. பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான "சாகோ", "ராஜே ஷியாம்" மற்றும் "ஆதிபுருஷ்" உள்ளிட்ட திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெறவில்லை. 

Tap to resize

Latest Videos

undefined

பொங்கலோ பொங்கல்.. ரசிகர்களுக்கு தித்திக்கும் தை திருநாள் வாழ்த்து சொன்ன நட்சத்திரங்கள் - கூல் கிளிக்ஸ்!

ஆனால் அண்மையில் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் அவர்களுடைய இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பிரித்திவிராஜ் நடிப்பில் வெளியாகியிருந்த "சலார்" திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்றாலும் பிரபாஸுக்கு வசூல் ரீதியாக அந்த திரைப்படம் பெரும் வெற்றியை கொடுக்கவில்லை என்றே கூறலாம். 

🔥

Maaaaaaaaassssss !! With My Darlinggggggg ❤️ Anna &
With this lovely team ✨💥💥💥💥💥💥 pic.twitter.com/RvO0NAa9bH

— thaman S (@MusicThaman)

இந்நிலையில் பிரம்மாண்டம் என்கின்ற அந்த டிரேட் மார்க்கை விட்டுவிட்டு தற்பொழுது மீண்டும் தனது கமர்சியல் பாணிக்கு திரும்பியுள்ளார் பிரபாஸ். முதல்முறையாக மாருதி என்ற இயக்குனருடன் ஒரு திரைப்படத்தில் இணையும் பிரபாஸ், அந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகளை விரைவில் துவங்க உள்ளார். "தி ராஜா சாப்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல யோகி பாபு இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இது வேட்டையன் பொங்கல்.. மாஸ் லுக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - புதிய Colorful போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

click me!