Super Star Rajinikanth : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது தனது 170வது படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை பிரபல இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய அளவிலான வெற்றியை பெற்றது. சுமார் 600 கோடியை அந்த திரைப்படம் உலக அளவில் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து சிறிது காலம் ஓய்வில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கி புகழ்பெற்ற பிரபல இயக்குனர் டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் "வேட்டையன்" என்ற திரைப்படத்தில் நடிக்க துவங்கினார். இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170-வது திரைப்படமாகும்.
இந்த திரைப்பட பணிகளை முடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்தபடியாக வருகின்ற ஏப்ரல் மாதத்தில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள அவருடைய 171 வது திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். அதை தொடர்ந்து ஒரு திரைப்படத்தில் பிரபல இயக்குனர் மாரி செல்வராஜுடன் சூப்பர் ஸ்டார் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
Happy Pongal 😇☀️🌾 wishes from VETTAIYAN team! 🤗 May this festival of harvest add more colourful moments to your life! ✨ 🕶️ … pic.twitter.com/R3DDsgnL5g
— Lyca Productions (@LycaProductions)அதைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்திலும், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ச்சியாக படங்களை நடிக்க உள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இன்று ஜனவரி 15ஆம் தேதி தைத்திருநாள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் வேட்டையன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா ஒரு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது.