படுபயங்கர ஆபாசம்...டபுள்மீனிங் டயலாக்ஸ்...லிப்லாக் காட்சிகள்...காஜல் அகர்வால் படத்துக்கு 25 கட் கொடுத்து குதறி எடுத்த சென்சார்...

By Muthurama LingamFirst Published Aug 7, 2019, 11:52 AM IST
Highlights

மிக மோசமான ஆபாசக் காட்சிகள்,இரட்டை அர்த்த வசனங்கள், பெண்ணுக்குப்பெண்ணே முத்தமிடும் லிப் லாக் காட்சிகள் போன்ற பல ஆட்சேபகரமான காட்சிகள் இடம்பெற்றிருந்த காஜல் அகர்வாலின் ‘பாரிஸ் பாரிஸ்’படத்துக்கு 25க்கும் மேற்பட்ட கட்டுகளை சென்சார் போர்டு அறிவித்ததால் அதிர்ச்சியடைந்தது படக்குழு.

மிக மோசமான ஆபாசக் காட்சிகள்,இரட்டை அர்த்த வசனங்கள், பெண்ணுக்குப்பெண்ணே முத்தமிடும் லிப் லாக் காட்சிகள் போன்ற பல ஆட்சேபகரமான காட்சிகள் இடம்பெற்றிருந்த காஜல் அகர்வாலின் ‘பாரிஸ் பாரிஸ்’படத்துக்கு 25க்கும் மேற்பட்ட கட்டுகளை சென்சார் போர்டு அறிவித்ததால் அதிர்ச்சியடைந்தது படக்குழு.

கங்கணா ரணாவத் நடிப்பில் இந்தியில் வெளியான ‘குயின்’ படம்  4 தென்னிந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் ரீமேக் ஆகிறது. காஜல் அகர்வாலை நாயகியாகக் கொண்டு தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ எனவும், தமன்னாவை நாயகியாகக்கொண்டு தெலுங்கில் ‘தட் இஸ் மகாலெட்சுமி’ எனவும் மஞ்சிமா மோகனை நாயகியாகக் கொண்டு மலையாளத்தில் ‘ஜம் ஜம்’ எனவும் பருல் யாதவ்வை கதா நாயகியாகக்கொண்டு கன்னடத்தில் ‘பட்டர்ஃபிளை’ எனவும் உருவாகியுள்ளது. 

நான்கு மொழிகளிலும் மனுகுமரன் தயாரித்துள்ளார். தமிழ் மற்றும் கன்னட பதிப்பை நடிகரும் இயக்குனருமான ரமேஷ் அரவிந்த் இயக்கி உள்ளார். ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தை நிறைவு செய்து சென்சாருக்கு அனுப்பிய படக்குழுவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சென்சார் துறை பல இடங்களில் காட்சிகளின் சில பகுதிகளை வெட்டச்சொன்ன சென்சார் போர்ட்,  சில காட்சிகளில் ஆடியோவை மட்டும் வெட்ட, சில காட்சி ஆடியோ, வீடியோ இரண்டையும் வெட்டி உள்ளனர். மொத்தமாக 25க்கும் மேற்பட்ட  இடங்களில் வெட்டியுள்ளதால் படக்குழுவினர் மறு சீராய்வுக் குழுவுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்த படத்தின் மலையாள, கன்னட பதிப்புகளுக்கு தணிக்கைத் துறை யு/ஏ சான்றிதழ் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் காஜல் அகர்வாலின் மார்பகத்தை அவரது தோழி ஒருவர் அழுத்திப்பிடிக்கும் காட்சி ஒன்று வெளியாகி அநேகரின் அதிர்ச்சிக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.

click me!