
தொழிலதிபரான லெஜண்ட் சரவணன், நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக அவர் தனது கடை விளம்பரங்களிலேயே நடித்து புது டிரெண்டை உருவாக்கினார். குறிப்பாக இவர் தமன்னா, ஹன்சிகா போன்ற முன்னணி நடிகைகளுடன் விளம்பரங்களில் ஆட்டம் போடுவதை பார்த்து கோலிவுட்டே வாயடைத்து போனது.
கடந்த சில ஆண்டுகளாக விளம்பரங்களில் மட்டும் நடித்து வந்த வெஜண்ட் சரவணன், தற்போது சினிமாவிலும் ஹீரோவாக களமிறங்கி உள்ளார். இவர் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே அஜித்தின் உல்லாசம், ஷெரின் நடித்த விசில் போன்ற வெற்றிப் படங்களை இயக்கி உள்ளனர்.
இப்படத்துக்கு லெஜண்ட் என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்துள்ளார். இப்படம் மூலம் அவர் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். மேலும் ரோபோ சங்கர், யோகிபாபு, விவேக், பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். அவரது இசையில் கடந்த மாதம் வெளியான மொசலோ மொசலு என்கிற பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது 2-வது பாடல் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி வாடிவாசல் என்ற பாடல் வருகிற மே 20-ந் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். வழக்கமாக சூர்யாவின் வாடிவாசல் படம் தான் டுவிட்டரில் டிரெண்டாகும், ஆனால் தற்போது லெஜண்ட் படத்தின் வாடிவாசல் பாடல் டிரெண்ட் ஆனதை பார்த்து சூர்யா ரசிகர்கள் ஷாக் ஆகிப்போயினர்.
இதையும் படியுங்கள்... The Legend movie :கேன்ஸ் பட விழாவில் ‘லெஜண்ட்’ படக்குழு கொடுக்க உள்ள மாஸ் சர்ப்ரைஸ்- அதிரடி காட்டும் அண்ணாச்சி
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.