Thamarai Selvi dance video: பிக் பாஸ் புகழ், தாமரை முதன் முறையாக மாடர்ன் உடை அணிந்து, ஐக்கி பெர்ரியுடன் குத்தாட்டம் போட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.
பிக் பாஸ் புகழ், தாமரை முதன் முறையாக மாடர்ன் உடை அணிந்து, ஐக்கி பெர்ரியுடன் குத்தாட்டம் போட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.
பிக்பாஸ் தாமரை பயணம்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். மக்களின் பொழுது போக்கிற்காக பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல், வழங்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் கலந்து கொண்ட தாமரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பிக்பாஸ் அல்டிமேட்:
இதையடுத்து, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் என்ற OTTயில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாக பிரத்தேகமாக துவங்கப்பட்டது. பிக்பாஸ் அல்டிமேட்டில் வனிதா, சினேகன், சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், ஜூலி, அபிராமி, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 14 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியின், இறுதி வாரத்தில் தாமரை, ரம்யா பாண்டியன், நிரூப், பாலா ஆகிய 4 போட்டியாளர்கள் இருந்தனர். இதில் பாலாஜி அதிக வாக்குகளை பெற்று வின்னராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடைசி வரை கடுமையாக விளையாடிய தாமரைச் செல்விக்கு 4-வது இடம் கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.
பிக்பாஸ் ஜோடிகள் 2:
பிக்பாஸ் சீசன் 5, பிக்பாஸ் அல்டிமேட் ஆகிய நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்ற தாமரை செல்வி, தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், எப்போதும் புடவை மற்றும் சுடிதாரில் தோன்றும் தாமரை முதன் முறையாக மாடர்ன் உடை அணிந்து, பிக் பாஸ் ஐக்கி பெர்ரியுடன் ஒரு ஆட்டம் போட்டுள்ளார். தற்போது, அந்த வீடியோ பார்த்த அனைவரும் நம்ம தாமரையா..? இது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.