ஆதி - நிக்கி கல்ராணியின் திருமண கொண்டாட்டம் படு ஜோரு... அஜித் பட பாட்டுக்கு குத்தாட்டம் போடும் வீடியோ வைரல்

Published : May 18, 2022, 02:52 PM IST
ஆதி - நிக்கி கல்ராணியின் திருமண கொண்டாட்டம் படு ஜோரு... அஜித் பட பாட்டுக்கு குத்தாட்டம் போடும் வீடியோ வைரல்

சுருக்கம்

Aadhi - Nikki Galrani : ஆதி நிக்கி கல்ராணி ஜோடியின் திருமண இன்று நடைபெறுகிறது. இதையொட்டி நடைபெற்ற ஹல்தி மற்றும் மெஹந்தி போடும் விழாவில் நானி, ஆர்யா - சாயிஷா, மெட்ரோ சிரீஷ் என ஏராளமான திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர்.

தமிழில் மிருகம், அய்யனார், அரவாண் போன்ற பல்வேறு ஹிட் படங்களில் நடித்து பாப்புலர் ஆனவர் ஆதி. சமீபகாலமாக தமிழ் படங்களில் நடிப்பதை இவர் குறைத்துக்கொண்டாலும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது லிங்குசாமி இயக்கத்தில் தயாராகி வரும் வாரியர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் ஆதி. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

நடிகர் ஆதியும், நடிகை நிக்கி கல்ராணியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நிக்கி கல்ராணி, இதையடுத்து கலகலப்பு 2, ஹரஹர மகாதேவகி, உள்பட பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக நடிகர் ஆதியுடனுன் மரகத நாணயம் மற்றும் யாகாவராயினும் நாகாக்க ஆகிய படங்களில் நடித்தபோது தான் அவர் மீது காதல் வயப்பட்டுள்ளார் நிக்கி கல்ராணி.

கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்த இவர்களுக்கு அண்மையில் திருமணம் நிச்சயமானது. இந்த நிகழ்வில், இருவரின் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் கலந்துகொண்டனர். அவர்கள் இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகின.

இந்நிலையில், ஆதி நிக்கி கல்ராணி ஜோடியின் திருமண இன்று நடைபெறுகிறது. இதையொட்டி நடைபெற்ற ஹல்தி மற்றும் மெஹந்தி போடும் விழாவில் நானி, ஆர்யா - சாயிஷா, மெட்ரோ சிரீஷ் என ஏராளமான திரைபிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். அப்போது அஜித்தின் வேதாளம் படத்தில் இடம்பெறும் ஆலுமா டோலுமா பாடலுக்கு இவர்கள் குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... D Imman : ச்சீ.. உன்ன மாதிரி ஆள்கூட 12 வருஷம் வாழ்ந்தேன் பாரு... டி இமானின் மறுமணத்தால் முதல் மனைவி குமுறல்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?